👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 18ம் தேதி நடக்கிறது என்று வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) வே.விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு:சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள், ஆட்கள் தேவைப்படும் தேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப்பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.