இன்று TRB தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியுள்ள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

1 Comments

இன்று TRB தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியுள்ள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கான தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வை எழுதுவதற்கு தகுதியான உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆன்லைன் தேர்வு இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியான உதவியாளர்களை நியமிக்கக்கோரி, சென்னை தி.நகர் பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏ.மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ஆசிரியர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் சார்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஆன்லைனில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் தேர்வாணையம் முறையாக செய்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டுமா என்பது குறித்து பதிலளிக்க கோரப்பட்டு இருந்தனர். அதில் யாரெல்லாம் தங்களுக்கு உதவியாளர்கள் தேவை என கோரியிருந்தனரோ அவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக தகுதியான ஆசிரியர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அரசுத் தரப்பின் இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியான நபர்களை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். அதேபோல பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித்தேர்வுகளின் போது உரிய விதிமுறைகளின்படி என்னென்ன சலுகைகளை அளிக்க வேண்டுமோ அதையும் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் இந்த நீதிமன்றத்தை அணுகலாம். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர். 2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்களுக்காக நாளை நடைபெற உள்ள கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Thành phần sữa ensure đức được cắt giảm lượng đường.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews