👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளியிலிருந்து வரும் பாக்டீரியாக்களை விட நம் கைகளால்தான் அதிகமாக சேதமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உறுப்புகள் பாக்டீரியாக்களால் எளிதில் தாக்கப்படும். அந்த உறுப்பின் தோல்களும் மிக மென்மையானதாக இருக்கும். அந்த உறுப்புகளை வெளியிலிருந்து வரும் பாக்டீரியாக்களை விட நம் கைகளால்தான் அதிகமாக சேதமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், நம் கைகளை கீபோர்ட், செல்ஃபோன், எதையாவது தொடுவது, எடுப்பது, கீறுவது இப்படி தொடர்ந்து கைகளை பயன்படுத்துவோம். அவை சுத்தமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவுதான். அப்படியிருக்கும் பட்சத்தில் மென்மையான உடல் பாகங்களை முடிந்த அளவு தொடாமல் இருப்பதே நல்லது.
உட்காருமிடம் :
பின்புறம் உட்காரமிடத்தை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே தொட வேண்டும். இல்லையெனில் அந்த இடத்தில் கட்டிகள், பொறிகள், சொரி என கிருமிகளால் சருமம் சேதமடையக் கூடும். அதுமட்டுமன்றி ஆசன வாய் வழியாகவும் கிருமிகள் தொற்றிக்கொள்ளக் கூடும்.
நகங்களுக்குக் கீழ் உள்ள தோல் :
நகங்களுக்கு கீழ் அழுக்குகள் , கிருமிகள் படர்ந்திருக்கும். என்னதான் சுத்தமாக பராமரித்தாலும் ஏதாவதொரு வகையில் அழுக்குகள் தொற்றிக்கொள்ளும். அதை கைகளால் தொடுவதால் தொற்றிக்கொள்ளும் அழுக்கு அல்லது பாக்டீரியா மற்ற பொருட்களிலோ அல்லது நம் உடலிலேயும் தொற்றிக்கொள்ளக் கூடும்.
காது :
காதுகளுக்கு உள்பகுதியில் கைகளால் தொடக் கூடாது. நகம் வளர்ப்போர் குறிப்பாக தொடவே கூடாது. ஒருவேலை அழுக்கு தேக்கம், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மருத்துவரை அணுகி சுத்தம் செய்வதே நல்லது.
கண்கள் :
கண்களில் அழுக்கு , கண்கள் அறுபடுதல் போன்ற உணர்வுகள் தோன்றினால் கைகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே தொட வேண்டும். அதுவும் மிகவும் கவனமாக தொட வேண்டும். இல்லையெனில் கண்களுக்கு புதிய பாக்டீரியாக்களை நீங்களே அறிமுகப்படுத்துவதாக இருக்கும். அப்படி ஒருவேளை அதிகமான அரிப்பு, வறட்சி ஏற்படுமாயின் மருத்துவரை அணுகுங்கள்.
வாய் :
வாயில் கை வைப்பாதாலேயே பல நோய்கள் வருவதாக அப்ளைடு மைக்ரோபயாலஜி இதழ் வெளியிட்டிருந்தது. அதேபோல் மக்களில் பலருக்கும் சும்மா இருக்கும்போதும் வாயில் கை வைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு வைப்பதால் கைகளில் உள்ள அழுக்கு வாயில் தங்கி தொற்றுகளை பரப்பும் எனக் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் வாயில் கை வைத்தாலும் அனுமதிக்காதீர்கள் என்கிறது ஆய்வு.
முகம் :
அழகுக் கலை நிபுணர்களானாலும், சரும மருத்துவர்களானலும் அவர்கள் சொல்லும் முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும். இருப்பதிலேயே முகச் சருமம் மிகவும் மென்மையானது. அதை கைகளால் அடிக்கடி தொடவதால்தான் அரிப்பு, முகப்பரு என சருமச் சேதங்கள் வருகின்றன. அதேபோல் கைகளை வைப்பதால் சருமத் துகள்களை விரிவடையச் செய்து தூசுகள், அழுக்குகள் எளிதில் தங்கிவிட வழிவகுக்கும்.
இவற்றை தடுக்க சிறந்தது அடிக்கடி கை கழுவது அல்லது சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துவதும் உங்கள் கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U