Search This Blog
Wednesday, September 25, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பிகில்' பட இசை விழாவில், ஆளும் கட்சியை விமர்சித்த, நடிகர் விஜய்க்கு எதிராக, ஆளும் கட்சியினர் காய் நகர்த்த துவங்கியுள்ளனர். இதனால், 'பிகில்' படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது.விஜய் நடித்த, பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை அருகே உள்ள, தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில் பேசிய விஜய், ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார். 'யாரை எங்கு அமர வைக்க வேண்டுமோ, அவர்களை, அங்கே அமர வைக்க வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்.,சை குத்தி காட்டி, அவர் பேசியதற்கு, ரசிகர்கள் வட்டாரம் பலத்த கைத்தட்டல் எழுப்பியது. விஜய் பேச்சுக்கு, அமைச்சர்கள், ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர். தற்போது, 'பிகில் பட இசை விழா நடத்த, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது' என, உயர் கல்வி துறை சார்பில், சம்பந்தப்பட்ட, தாம்பரம் அருகே உள்ள, சாய்ராம் பொறியியல் கல்லுாரிக்கு விளக்கம் கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.மேலும், அந்த படத்தில், கத்தியுடன், கறி வெட்டும் மரத்தை, காலில் மிதித்தபடி, விஜய் அமர்ந்துள்ள போஸ்டரை, உடனே நீக்கும்படி, இறைச்சி கடைக்காரர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மேலும், 'கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கையாளுவது, 'ஹீரோயிஸம்' ஆகாது; இது, அவரது ரசிகர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும்' என்றும், விஜய்க்கு, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.இதுபோன்ற விவகாரங்களால், 'பிகில்' திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சிக்கலில், 'பிகில்' விஜய்: பட விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித்துறை, 'நோட்டீஸ்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.