👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து போளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை தேர்வு பேரூராட்சி சார்பில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோனை கூட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் ஒய்.முகம்மத்ரிஜ்வான் தலைமை தாங்கினார். துப்புரவு மேற்பார்வையாளர் ஆர்.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை பா.தாமரைசெல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெ.திருஞானம் கலந்து ெகாண்டு ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து மாணவிகளிடையே பேசியதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழைநீர் சேமிப்பதால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்து பெற்றோர்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம் தேவை. பணம் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. இதை உணர்ந்து வருங்காலத்தில் நாம் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்வோம் என்றார்.
பின்னர், பள்ளி மாணவிகள் மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மழைநீரை சேகரிப்போம் என்பதை வலியுறுத்தி அந்த வார்த்தைகளின் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், மழைநீர் விழிப்புணர்வு வாகனத்தை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெ.திருஞானம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த, வாகனம் போளூர் நகரம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர்கள் என்.ஜெயபால், கே.ரவிச்சந்திரன், உஷாராணி உட்பட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U