பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், சென்னை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் விபத்து மரணத்துக்கு 1 லட்சம், விபத்தால் ஏற்படும் ஊனத்துக்கு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ₹10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை, இயற்கை மரணத்துக்கு 15 ஆயிரம், ஈமச்சடங்கு செலவுக்கு 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்து வரும் பெண்களுக்கு 1000, இதே வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000, பிளஸ் 1 படித்து வரும் பெண்களுக்கு 1000, பிளஸ் 2 படித்து வரும் பெண்களுக்கு 1500, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1500, முறையான பட்டப்படிப்புக்கு 1500, மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்புக்கு 1750, முறையான பட்ட மேற்படிப்புக்கு 2 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு 3 ஆயிரம், தொழிற்கல்வி பட்டபடிப்புக்கு 2 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டபடிப்புக்கு 4 ஆயிரம், தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு 4 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு 6 ஆயிரம், ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு 1000, மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு 1200 என கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை உதவித்திட்டத்தின் கீழ் மாதம் 1000 வீதம் 6 மாதங்களுக்கு 6 ஆயிரம், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்பட்டால் 3 ஆயிரம், மூக்குக் கண்ணாடி செலவுத்தொகையை ஈடுசெய்வதற்கு 500, முதியோர் ஓய்வூதியம் மாதம்தோறும் 1000 வழங்கப்படுகிறது.சென்னை மாவட்டத்தில் விடுபட்ட சீர்மரபினர் இன மக்கள் உரிய படிவத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்வதோடு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews