Search This Blog
Monday, September 30, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பதன் மூலம் எந்தெந்த வகையில் ஏமாற்று கும்பல் இயங்கி கொண்டிருக்கிறது என்பது தற்போது வெளியில் வந்துள்ளது. இன்னும் என்ன எல்லாம் வெளியில் வரப்ேபாகிறது என்று தெரியவில்லை. இன்றைக்கு வெளிவந்துள்ளதை பார்க்கும் போது பனிமலையில் ஒரு சின்ன கல் தான் நம் கண்ணில் பட்டுள்ளது. பல கோடி பணம் இதில் கைமாறியுள்ளது. இனிமேல் பயோ மெட்ரிக் சிஸ்டம் ெகாண்டு ஆள்மாறாட்டத்தை தடுக்க போவதாக கூறியுள்ளனர். இதை தடுத்தீர்கள் என்றால் இன்னும் நிறைய வழியில் இந்த ஆள்மாறாட்டம் வேறு வழியில் நடக்கும். நீட் தேர்வு என்பதே ஒரு பெரிய ஊழல். இது, மோசடி, வஞ்சகத்துக்கு கதவை திறந்து விட்டுள்ளது. ஆரம்பத்தில் நீட் ேதர்வு கூடாது என்று தமிழகத்தில் தான் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கி போய் விட்டது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு ஒரு மாணவர் சேர்ந்தார் என்று வெளியில் வந்தது. இப்போது கொஞ்சம், கொஞ்மாக இது போன்று பலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது வெளியில் வந்துள்ளது. தற்போது மாட்டிக்கொண்ட பையன் 2 வருடமாக கோச்சிங் மையத்தில் படித்து எழுதியுள்ளான். நீட் ஆரம்பித்த உடனேயே ஒரு பெரிய கோச்சிங் சாம்ராஜ்யமே உருவாகியது. ஏகப்பட்ட கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கில் பணம் கட்டி பலர் சேர்ந்தனர். அதில் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கினார்கள். அப்படி தேர்ச்சி இல்லை என்றால் இப்படி ஆள்மாறாட்டம் மூலம் மாணவர்கள் மருத்துவ சீட் பெற வழியை அந்த ேகாச்சிங் நிறுவனங்களே உருவாக்கியுள்ளது. இதை தடுக்க வேண்டுமென்றால் நீட் மாதிரியான ஒரு தேர்வு இருக்கவே கூடாது. நாடு முழுவதும் பொதுவான தேர்வு வைத்து அதில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது என்பது, அந்தெந்த மாநிலங்களில் பள்ளி இறுதி தேர்வுக்கு எல்லாம் மதிப்பே இல்லாமல் போய் விட்டது. நீட் என்பது கல்வியையே அழித்து ஒழிக்கின்ற பெரிய வழி. கல்வியை முழுக்க முழுக்க பயங்கரமான வாணிபமாக செய்கின்ற ஒரு கும்பலின் கையில் கொஞ்சம், கொஞ்சமாக போய் விட்டது.
கல்விக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதோ எந்த வகையிலும் கல்விக்கு ஆகும் செலவை குறைத்தாகி விட்டது. கல்வி கொஞ்சம், கொஞ்சமாக தனியார் மயமாகி கொண்டிருப்பதை பார்க்கும் போது, இன்னும் பயங்கரமான தனியார் மயமாக போவதன் விளைவை நினைத்தால் என்ன நடக்குமோ என்ற எண்ணம் ஆழ்மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. மோசமான ஊழலை நிறுத்த வேண்டுமென்றால் நீட்டை ஒழிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்வதையெல்லாம் நிறுத்த வேண்டும். இந்த புதிய தேசிய கல்வி கொள்கை வந்து விட்டால், 3ம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு நடத்த உள்ளனர். இப்படி, 3ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தும் போது அதற்காக கோச்சிங் சென்டர்கள் வந்து விடும். லட்சக்கணக்கில் பணம் கொட்ட வேண்டும். இது, சாதாரண, அடித்தட்டு மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகி விடும். இந்தியா ஏற்கனவே கல்வியில் பின் தங்கியுள்ளது. உலகத்தில் 191 நாடுகளில் இந்தியா 145வது இடத்தில் உள்ளது. இது போன்ற தேர்வு முறையை தொடரும் பட்சத்தில் இது, இன்னமும் மோசமாகும். பயோ மெட்ரிக் சிஸ்டம் வைத்தால் எல்லாம் சரியாகாது. நீட்டை ஒழிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.நீட் என்பது கல்வியையே அழித்து ஒழிக்கின்ற பெரிய வழி. கல்வியை முழுக்க முழுக்க பயங்கரமான வாணிபமாக செய்கின்ற ஒரு கும்பலின் கையில் கொஞ்சம், கொஞ்சமாக போய் விட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
NEET/JEE
மோசடி, வஞ்சகத்துக்கு கதவை திறந்துள்ளது நீட்: வசந்திதேவி, மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர்
மோசடி, வஞ்சகத்துக்கு கதவை திறந்துள்ளது நீட்: வசந்திதேவி, மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.