👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலியல் புகாரில், பேராசிரியருக்கு அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வுக்கு, உயர் நீதிமன்ற கிளை, இடைக்கால தடை விதித்துள்ளது.மதுரை, காமராஜ் பல்கலை, திரைப்பட மற்றும் மின்னணு ஊடகவியல் மைய தலைவர் கர்ண மகாராஜன், 49. இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆராய்ச்சி மாணவி ஒருவர் புகார் செய்தார்.பல்கலையின் உள் விசாரணைக்குழு விசாரித்து, உறுதி செய்து, அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில், கர்ண மகாராஜனை கட்டாய ஓய்வில் செல்ல, பல்கலை பதிவாளர், ஆக., 22ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, கர்ண மகாராஜன், &'உள்நோக்குடன், பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளக்கமளிக்க, மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கவில்லை. உள்விசாரணைக் குழுவின் அறிக்கை, பல்கலை சிண்டிகேட் தீர்மான நகல் வழங்கவில்லை. &'பதிவாளரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்&' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி, வி.எம்.வேலுமணி விசாரித்து, &'&'இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,&'&' என, உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U