நீங்கள் Paytm பயனாளரா? ’இந்த’ ஆப்ஸ்-களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

நீங்கள் Paytm பயனாளரா? ’இந்த’ ஆப்ஸ்-களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Paytm பயனாளர்களையே பல மோசடிக் கும்பல்களும் மொபைல் ஹேக்கிங் மூலம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. Paytm பயனாளர்கள் தங்களது வங்கிக்கணக்கை ஆன்லைன் தளங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க சில ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்யவே கூடாது என Paytm நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Paytm பயனாளர்கள் KYC விவரங்களை அப்டேட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். KYC அப்டேட் செய்யும்போது சில போலி செயலிகளை நீங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்தால் ஆன்லைன் வங்கி மோசடியாளர்களின் கையில் சிக்கும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போலி செயலிகள் மூலம் ஆன்லைன் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மோசடியாளர்களின் கையில் சிக்க வாய்ப்புள்ளது. Any Desk, Quicks Port போன்ற செயலிகளை Paytm பயனாளர்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது. UPI பேமன்ட் செயலிகள் அனைத்துக்குமே இந்த எச்சரிக்கை பொருந்தும். சமீப காலமாக மோசடியாளர்கள் தொடர்ந்து Any Desk, Team Quer போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் பேமன்ட் முறையைப் பின்பற்றும் பயனாளர்களின் வங்கிக்கணக்கை ஹேக் செய்து அவர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றச்செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக Paytm பயனாளர்களையே பல மோசடிக் கும்பல்களும் மொபைல் ஹேக்கிங் மூலம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews