IRCTC Tatkal Booking :செய்பவர்கள் கவனத்திற்கு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 19, 2019

IRCTC Tatkal Booking :செய்பவர்கள் கவனத்திற்கு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
irctc tatkal booking time : வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் பயணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தட்கல் டிக்கெட் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது.அவசர தேவைக்கும் இறுதி நிமிட பயணத்திற்கும் இந்திய ரயில்வேயின் irctc.co.in தளத்தில் இந்தத் தட்கல் டிக்கெட்டைப் பதிவு செய்துக் கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. irctc tatkal booking online: புக் செய்வது எப்படி? 1. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஏதும் இல்லை என்றால், 'Flexible with Date' என்பதை க்ளிக் செய்தால் எந்த தேதியில் ரயில்கள் உள்ளது எனத் தகவல் கிடைக்கும்.இப்போது பயண நேரம், புறப்படும் நேரம், போய்ச்சேரும் நேரம் போன்ற தகவல்களுடன் ரயில்களின் பட்டியல் திரையில் வரும். 3. ரயில் பட்டியலுக்கு மேல் உள்ள கோட்டா (Quota) என்பதில் தட்கல் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
4. இருக்கை விபரம் மற்றும் கட்டணத்தைத் தெரிந்துக் கொள்ள 'Check availability & Fare' என்பதை கிளிக் செய்யலாம். இப்போது, ரயிலில் இருக்கை விவரம், கட்டணம் ஆகியவை தெரியும். 5. 'Book Now' என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்லவும். 6. பயணிகளின் பெயர், வயது ஆகிய விபரங்களைச் சரியாக டைப் செய்யும். முதியோருக்கு சலுகை பெற Senior Citizen Concession என்பதை தேர்வு செய்ய வேண்டும். (முதியோர் சலுகை பெற தகுதியான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 58) 7. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என ஏதாவது ஒரு வழியில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். பணம் செலுத்தி டிக்கெட் உறுதி செய்யப்பட்டதும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டிக்கெட் விவரமும் ஈமெயிலுக்கு டிக்கெட்டும் அனுப்பி வைக்கப்படும்.
8. மெயிலில் கிடைத்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.கட்டண முறைகள்: எல்லா விவரமும் பதிவிட்ட பிறகு உங்கள் வங்கி கார்டு தயாராக இருக்க வேண்டும். எனெனில் பணம் கட்டும்போது ஓடிபி போன்ற விவரங்கள் தேவைப்படும். எனவே கார்டு, செல்போன் ஆகியவற்றை அருகிலேயே வைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய உட்காரவும். தட்கல் முன்பதிவு நேரம்: ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த டிக்கெட்டை பதிவு செய்துக் கொள்ளலாம். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், நான் ஏ.சி வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews