👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற போர்டு ஹை ஸ்கூல் என்றுஅழைக்கப்படும் தற்போதைய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. ஒரு காலத்தில் இப்பகுதியில் சிறந்த பள்ளியாக செயல்பட்டது. இதில் படித்த மாணவர்கள் இப்போது அரசு அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் உள்ளனர். பள்ளியில் என்.எஸ்.எஸ்.இ என்.சி.சி.இ விளையாட்டுத்துறை எனஅனைத்து வசதிகளும் உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததாலும், பள்ளியில் உள்ள ஏதோ ஒரு சில குறைகளாலும் திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து அருகிலுள்ள கிராமங்களான நெடும்பலம், கட்டிமேடு, பள்ளங்கோயில், நீர்முளை பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் நாடிச் சென்றுமாணவர்கள் படித்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 200க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் . பள்ளியின் வசதிகேற்றாற்போல் மாணவர்களின் எண்ணிக்கை இல்லை. இதே வளாகத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அதற்கு தனியாகதலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.இரண்டு பள்ளிகளிலும் குறைந்த அளவு மாணவமாணவிகளே பயில்கின்றனர்.ஒரே வளாகத்தில் இரு அரசு மேல்நிலைப்பள்ளிகள்இயங்கி வருவதால் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இந்தபள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரே பள்ளியாகமாற்ற வேண்டும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடமாக பலஇடங்களில் சேதமடைந்து இருப்பதால் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை பரிசோதித்து புதுப்பிக்கப்பட வேண்டும். கஜா புயலின்போது விழுந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர்கள் இன்னமும் சீரமைக்கப்படவில்லை. அரசு தினம் தினம் புது மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மக்களின் அடிப்படை தேவையான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய இந்தபள்ளியினை சிறப்பு கவனம் செலுத்தி பள்ளியின் தரத்தையும், மாணவர்களின் கல்வியையும் கருத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த இரண்டு பள்ளிகளையும் இணைத்து ஒரே பள்ளியாக மாற்றம் செய்து அந்த பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. கல்விக்கென்றுதனி சேனல்களெல்லாம் கொண்டுவரும் அரசு இதுமாதிரி சரியாக செயல்படாமலும், ஒரேஇடத்தில் இரு பள்ளிகளையும் நடத்தி அரசு பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் பள்ளிகளை எப்போது கண்டுகொள்ளும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U