இந்திய வனப் பணி தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2019

இந்திய வனப் பணி தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய வனப்பணி தேர்வில், வனக்கல்லூரியில் படித்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் என்ற பெருமை பெற்றுள்ளார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர். விவசாய குடும்பத்தை சார்ந்தவரான இந்த மாணவர் இந்திய வனப்பணிக்கு தேர்வாகியுள்ளது பெருமை அடைய வைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா செம்மடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், லட்சுமி மகன் வெங்கடேஷ் மாணிக்கம். லட்சுமி தம்பதியினருக்கு 7 பெண் குழந்தைகளும் எட்டாவதாக வெங்கடேஷ் பிறந்தார். மாணிக்கம், லட்சுமி குடும்பத்தினர் மிகவும் எளிமை வாய்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தங்களின் கஷ்டத்தினை தங்கள் பிள்ளை மேல் செலுத்தாமல் அனைவரையும் குறிப்பாக ஏழு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கி அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர் எட்டாவதாக பிறந்த வெங்கடேஷ் கஷ்டப்பட்டு எந்த ஒரு காலகட்டத்திலும் அவருடைய படிப்பினை பாதிக்காமல் அவரையும் படிக்கவைத்து தற்பொழுது இந்திய வன பணிக்கு செல்லுகின்ற வகையில் அவரையும் உருவாக்கியுள்ளனர். வெங்கடேஷ் ஓமலூரில் உள்ள பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து 2010ஆம் ஆண்டு வன கல்லூரியில் சேர்ந்து இந்திய வனப் பணிக்கான படிப்பினை தேர்வு செய்து மிகவும் கஷ்டப்பட்டு மனம் தளராமல் படிப்பினை முடித்து தற்போது இந்திய அரசால் திரிபுரா மாநிலத்தில் இந்திய வனப் பணி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது வெற்றிக்கு காரணமான பெற்றோர் உடன் பிறந்த சகோதரிகள் கல்லூரிப் பேராசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாக கூறினார். இந்திய வனப்பணி தேர்வில் வனக்கல்லூரியில் படித்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் என்ற பெருமை கொண்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் இந்த வனத்துறை பணிக்காக எண்ணற்ற துயரங்களைக் கடந்து என்னுடைய படிப்பினை முடித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், தற்போது நான் பொறுப்பேற்கும் மாநிலத்தில் வானத்தை பாதுகாப்பதற்கும் வன உயிரினங்களை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவேன் குறிப்பாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க என்ற வகையில் என்னுடைய பணி இருக்கும் என தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews