நீட்.. இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக பெண் மருத்துவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

நீட்.. இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக பெண் மருத்துவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகில இந்திய சித்த மருத்துவ உயர் படிப்பிற்கான நீட் தேர்வில் கூகனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பொன்மணி இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்.கணேசன் - ஜெயசுதா தம்பதிகளின் மகள் பொன்மணி. சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 1062 மதிப்பெண்களை பெற்றார். மருத்துவர் ஆகலாம் என்றால் கட் ஆப் கிடைக்கவில்லை. அதனால் சித்தமருத்துவம் படித்தார். படிக்கும் போதே உயர்கல்வியும் படிக்க வேண்டும், ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தாலும் பி.எஸ்.எம்.எஸ். படிக்கவே வங்கி கடன் பெற்று படிப்பை முடித்தார். அதன் பிறகு உயர்படிப்பிற்காக நீட் தேர்வை எதிர்கொண்டார். நம்பிக்கை அவரிடம் இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவோம் தொடர்ந்து படிப்போம் என்று..
இந்த நிலையில் தான் தேர்வு முடிவுகள் வெளியானபோது.. சுமார் ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் தனக்கு இடம் கிடைக்கும் அளவு மதிப்பெண் கிடைக்கும் என்றிருந்த பொன்மணிக்கு இன்ப அதிரிச்சி கிடைத்தது. ஆம்.. 400 க்கு 377 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனையே படைத்துவிட்டார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோரும் உறவினர்களும் இனிப்புகளை பறிமாறிக் கொண்டனர். இது குறித்து சாதனை மாணவி பொன்மணி கூறும் போது.. ஆயிரம் பேர் எழுதிய தேர்வு. வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்ப 377 மதிப்பெண் பெற்ற இந்தியாவில் முதலிடம் என்பது சந்தோசமாக உள்ளது. அடுத்து சென்னையில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் படிப்பை தொடருவேன். இதில் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவேன். படிப்பு முடிந்த பிறகு இலவச சிகிச்சை செய்ய வேண்டும் என்பது என் ஆசை என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews