‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ உதவியுடன் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் விண்ணில் பறந்தது: சென்னை அருகே நிகழ்ச்சி ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2019

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ உதவியுடன் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் விண்ணில் பறந்தது: சென்னை அருகே நிகழ்ச்சி ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பின் உதவியுடன் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உருவாக்கிய பலூன் செயற்கைக் கோள் சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள ஸ்பேஸ் போர்ட் இந்தியா வளாகத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லிபாபு, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனர் ஸ்ரீமதி கேசன், ஹெக்ஸாவேர் தலைமை மக்கள் அலுவலர் அம்ரின், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப் பின் உதவியுடன் அரசு பள்ளி மாணவ - மாணவியர் உருவாக்கிய பலூன் செயற்கைக்கோள் சென்னை சிறுசேரியிலிருந்து நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்டது.
‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப் பாற்றலை ஊக்குவிக்கும் வகை யில் தேசிய அளவில் அறிவியல் போட்டிகளை நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்வெளி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 பிரிவுகளில் தேர்வு செய் யப்படுகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதில் சிறந்த மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி பயிற்சிக்காக ரஷ்யா வுக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள். இந்நிலையில், இந்திய விண் வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாளை புதுமையாகக் கொண் டாடும் வகையில் மாணவர்களை ஈடுபடுத்தி புதுமையான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி, விண்வெளி ஆய்வில் ஆர்வம் மிக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் 100 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான நடுவர் குழு அவர்களைத் தேர்வு செய்தது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ குழு வினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் அந்த மாணவ - மாண வியர் வானிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு பலூன் செயற் கைக்கோளை உருவாக்கினர். அதை விண்ணில் பறக்கவிடும் நிகழ்ச்சி சென்னை சிறுசேரி சிப் காட்டில் ஸ்பேஸ் போர்ட் இந்தியா வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் மாணவ - மாணவியர் வடிவமைத்த சிறிய செயற்கைக்கோள் பொருத் தப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லி பாபு, திரைப்பட இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் முன்னிலையில் மாணவ - மாணவி யர், ஆசிரியர்கள், பெற்றோர் சூழ்ந்திருக்க காலை 11.25 மணிக்கு பலூன் செயற்கைக்கோள் விண் ணில் பறக்கவிடப்பட்டது. அப்போது அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எதிர்பார்த்தபடி, தரையிலிருந்து ஒரு லட்சம் அடி உயரம் வரை சென்ற பலூன் செயற்கைக்கோள் சென்சார் சாதனங்கள் மூலமாக வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம், காற்றழுத்தம் உள்ளிட்ட வானிலை தொடர்பான தகவல்களை தரை யில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டு அறைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தது. ராட்சத பலூன் வெடித்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த பாரா சூட் மூலமாக வேலூர் அருகே அது வெற்றிகரமாக தரையிரங்கியது. முன்னதாக, டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லி பாபு மாணவ - மாணவியர் மத்தியில் பேசும்போது கூறியதாவது: நான் வடசென்னைப் பகுதி யைச் சேர்ந்த குடிசைவாசி. இன் றைய தினம் டிஆர்டிஓ-வில் விஞ் ஞானியாக பணியாற்றுகிறேன். மனம் இருந்தால் அனைவராலும் சாதிக்க முடியும். ஒருமுறை இஸ்ரேல் விஞ்ஞானி என்னிடம் பேசும்போது தங்கள் நாட்டில் பள்ளி மாணவர்களே செயற்கைக்கோள் வடிவமைப்பார்கள் என்று குறிப் பிட்டார். இஸ்ரேல் மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நமது பள்ளி மாணவர்களும் நிரூபித்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, வேதாரண்யம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் சேர்ந்து முதல்முறையாக செயற்கை கோளை உருவாக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். உலகத்திலேயே நவீன போர் விமானங்கள் தயாரிக்கும் தொழில் நுட்பம் 7 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்பிய 4 நாடு களில் இந்தியாவும் ஒன்று. அதிக வேகம் வாய்ந்த ஏவுகணை ரஷ்யா விடமும் இந்தியாவிடமும் மட்டுமே உள்ளன.
விரைவில் சந்திரயான்-2 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலனை மெதுவாக தரையிறங்கச் செய்த முதல் நாடாக இந்தியா திகழப் போகிறது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத் தைக் கொண்டாடும் வகையில் என்டிஆர்எஃப் எனப்படும் தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம் அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு 75 மாண வர் செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானி டில்லி பாபு கூறினார்.‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனர் மதி கேசன், ஹெக் ஸாவேர் தலைமை மக்கள் அலு வலர் அம்ரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஹெக்ஸாவேர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்திருந்தன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews