முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு: பெண் கல்வி அலுவலரை வெளியே தள்ளிய அவலம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு: பெண் கல்வி அலுவலரை வெளியே தள்ளிய அவலம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக மதுரை மாவட்டம், காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வளர்மதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையில் இருந்து இதற்கான உத்தரவும் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்த அவர் கையெழுத்திட்டு, மாவட்ட கல்வி அலுவலராக பணியை தொடங்கினார். கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து விட்டு வந்து, கல்வி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்கெனவே விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக (பொறுப்பு) உள்ள சத்திரரெட்டியப்பட்டி அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் மோகன் அலுவலகத்துக்கு வந்தார். வளர்மதியிடம், ‘‘இங்கே பணி புரியக்கூடாது. வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்து சென்றுவிடு’’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் நாற்காலியில் இருந்த வளர்மதியை இழுத்து வெளியில் தள்ளிவிட்டு ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் வளர்மதி அதிர்ச்சியடைந்தார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே வளர்மதி, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இதையடுத்து அவர் அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வரும் மோகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ஆனால், அவர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் பெயரை சொல்லி தப்பித்து வருகிறார். இதற்கு முன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த சுவாமிநாதனும் இவருக்கு ஆதரவாகவே இருந்தார். இதனால் இவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது கூட ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் சேர்ந்து, புதிய அலுவலரை பொறுப்பேற்க விடாமல் தடுத்து தொலைபேசியில் மிரட்டியதாக தெரிகிறது. பதவியேற்ற சில நிமிடங்களிலேயே அவரை மாற்றி விட்டனர். மோகன் போன்ற நபர்களால்தான் மாவட்டத்தின் கல்வித்தரம் பின்தங்கி வருகிறது. கல்வித்துறையை அரசியலாக்கி கொண்டிருப்பதால் இன்னும் கல்வித்தரம் எந்த அளவுக்கு கீழே போகப்போகிறது என்பது புரியவில்லை’’ என வேதனையோடு தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews