வங்கி அதிகாரி பணி வேண்டுமா? 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

வங்கி அதிகாரி பணி வேண்டுமா? 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 14 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட 4336 புரபெசனரி அதிகாரி மற்றும் மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான 9-வது பொது எழுத்துத் தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பீ.பி.எஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 4,336
பணி: Probationary Officer (PO) / Management Trainees
1. Allahabad Bank - 500
2. Bank of India - 899
3. Bank of Maharashtra - 350
4. Canara Bank - 500
5. Corporation Bank - 150
9. Indian Bank - 493
10. Oriental Bank of Commerce - 300
11. UCO Bank - 500
12. Union Bank of India - 644
வயது வரம்பு: 01.08.2019 தேதியின்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 02.8.1989 தேதிக்கு முன்னரும், 01.08.1999 ஆம் தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் நடத்தப்படும் முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் 12, 13, 19, 20 ஆம் தேதிகள்
முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019
பொது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews