👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தின் 13-ஆவது அரசு சட்டக் கல்லூரியை, நாமக்கல்லில் அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிகழாண்டிலேயே தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, சேலத்தில் அண்மையில் சட்டக் கல்லூரி திறக்கப்பட்டது. நாமக்கல் - திருச்சி சாலையில், டான்சி காட்சியகத்தை சட்டக் கல்லூரியாக மாற்றுவதற்கான பணிகள் 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழகத்தின் 13-ஆவது அரசு சட்டக் கல்லூரி சனிக்கிழமை திறக்கப்பட்டது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கல்லூரி கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.
இக்கல்லூரியில், மூன்று ஆண்டுகள் படிப்பில் 80 மாணவர்கள், 5 ஆண்டுகள் படிப்பில் 80 மாணவர்கள் என மொத்தம் 160 பேர் பயில உள்ளனர்.
தற்காலிகமாக டான்சி கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாமக்கல் - பரமத்தி சாலையில், தொட்டிப்பட்டி செல்லும் வழியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் சட்டக்கல்லூரிக்கு புதிய கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளது.
புதிய சட்டக் கல்லூரி திறப்பு விழாவில், பிற அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் 15 பேருக்கு அவர்கள் விரும்பியதன் அடிப்படையில் நாமக்கல் சட்டக் கல்லூரியில் பயில்வதற்கான உத்தரவுக் கடிதம் விழாவில் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், சட்டக்கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே.வேல், நாமக்கல் சட்டக் கல்லூரி தனி அலுவலர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடக்க விழா, வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. சட்டக்கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு 21ம்தேதி(இன்று) முதல் நடைபெறுகிறது. நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் இந்தாண்டு 3 மற்றும் 5 ஆண்டுகள் சட்ட பட்டப்படிப்பில் தலா 80 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள் என்றார்
நாமக்கல்லில் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது : மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
நாமக்கல்லில் வருகின்ற ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதிய சட்டக்கல்லூரியில் 3, 5 ஆண்டு படிப்புகளில் தலா 80 பேர் சேர்க்கப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U