1,200 சதுர அடி கட்டடங்களுக்கு உடனடி அனுமதி வழங்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

1,200 சதுர அடி கட்டடங்களுக்கு உடனடி அனுமதி வழங்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை,:நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் 1,200 சதுர அடி பரப்பளவு வரையிலான கட்டடங்களுக்கு கள ஆய்வு இன்றி எளிய முறையில் இணையதளம் வாயிலாக கட்டட அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி பணிகளை முறைப்படுத்த பொது கட்டட விதிகள் பிப். 4ல் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கான உத்தரவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய அரசாணையை நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் வீட்டு வசதி வாரிய மனைகளில் 2500 சதுர அடிக்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி வரையிலாக குடியிருப்பு கட்ட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் பதிவு செய்த பொறியாளர் வாயிலாக வரைபடங்களை தயாரிக்க வேண்டும். அந்த வரைபடங்களை நகராட்சி மாநகராட்சி இணையதளங்களில் தானியங்கி முறையில் சரி பார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். அதன் பின் உரிய ஆவணங்களை மட்டும் ஆய்வு செய்து கள ஆய்வு இன்றி இணையதளம் வாயிலாக உடனடி திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளை உள்ளாட்சி அமைப்புகள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியாளரே பொறுப்பு! * விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். இது அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் * பதிவு பெற்ற உரிமையாளரின் உறுதி மொழி ஆவணம் வரைபடம் மனைக்கான உரிமை உள்ளிட்டவை நோட்டரி சான்றுடன் இருக்க வேண்டும் * இணையதளம் வாயிலாக டிஜிட்டல் ஒப்புதல், வரைபடம், அனுமதி ஆணை வழங்கப்படும் * இந்த நடைமுறையில் அனுமதி பெறப்படும் கட்டடங்களின் உறுதி தன்மைக்கும் இதர பாதுகாப்புக்கும் பதிவு பெற்ற பொறியாளரே பொறுப்பு * இவற்றில் விதிமீறல் மற்றும் பிற தவறுகள் தெரிய வந்தால் பொறியாளரின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews