பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்: யுஜிசி கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்: யுஜிசி கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதி பிரிவினருக்கும் உயர்கல்வியில் 10 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைத்து துறைக்கும் இந்த உத்தரவை அனுப்பி வைத்தது. மேலும், இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று முன்தினம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் கூடுதல் செயலாளர் தேவ் ஸ்வரூப் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டு வரப்பட்ட உத்தரவின் படி அனைத்து மாநில அரசுகளும் மேற்கண்ட உத்தரவை செயல்படுத்த வேண்டும். மாநில அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பல்கலைக் கழகம், உயர்கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு முதல் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின்போதே அதை கடைபிடிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுகுறித்து தங்கள் வளாகத்தில் தவகல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். UGC Letter reg.: Reservation for Economically Weaker Section(EWSs) for admission in Higher education Institutions மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுப் பல்கலைக் கழகங்களை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கேட்டுக்கொண்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தப் புதிய இடஒதுக்கீட்டு நடைமுறையை உடனடியாக நிகழ் கல்வியாண்டிலேயே (2019-20) அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாநில அரசு செயலர்களுக்கு சுற்றறிக்கையையும் யுஜிசி திங்கள்கிழமை அனுப்பியுள்ளது. அதில், இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews