ஐ.ஐ.டி.,யில் டெக் - எம்.பி.ஏ., படிப்பு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

ஐ.ஐ.டி.,யில் டெக் - எம்.பி.ஏ., படிப்பு அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், நடப்பு கல்வி ஆண்டில், டெக் - எம்.பி.ஏ., என்ற படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டுக்கு பின், பி.டெக்., மற்றும் எம்.பி.ஏ., என, இரண்டு வகை பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்து, ஐ.ஐ.டி.,யில் சேரும் மாணவர்களுக்கு, ஐந்தாண்டுகள், இந்த படிப்பு நடத்தப்படுகிறது.நவீன தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்ப வணிகம் உள்ளிட்டவை குறித்த மேலாண்மை பாடங்கள், இந்த படிப்பில் கற்று தரப்படும். நவீன கணினி தொழில்நுட்ப காலத்துக்கு, இந்தப் படிப்பு, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் உதவியாக இருக்கும் என, சென்னை, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. இளநிலைப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இந்த படிப்பை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் முடிவில் பி.டெக் இளநிலை பட்டமும் எம்.பி.ஏ. முதுகலைப் பட்டமும் அளிக்கப்படும்.
(இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை) முதல் முதலாக தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வியை ஒருங்கே வழங்கும் டெக் எம்.பி.ஏ. (techMBA) என்ற படிப்பை அறிவித்துள்ளது. இளநிலைப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இந்த படிப்பை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் முடிவில் பி.டெக் இளநிலை பட்டமும் எம்.பி.ஏ. முதுகலைப் பட்டமும் அளிக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் இரட்டைப் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பை சென்னை ஐஐடியின் மேனேஜ்மெண்ட் ஸ்ட்டீஸ் துறை வழங்குகிறது. 2019-20 கல்வி ஆண்டிலேயே இந்த படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டில் 25 முதல் 30 மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்பின் மூன்றாவது ஆண்டிலும் நான்காவது ஆண்டில் டெக். எம்.பி.ஏ படிப்பில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஐந்தாவது ஆண்டில் டெக் எம்.பி.ஏ.வில் சேர கிரேட், ஆப்டிடியூட் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அனுமதி கிடைக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews