👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ITR Filing 2019 Eligibility Criteria: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி இறுதிநாளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
யார் யார் எல்லாம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் 60 வயதிற்கு கீழ் உள்ள மற்றும் ஆண்டு வருமானம் ரூ .2.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சமாக உள்ளது. தனிநபர் அல்லது நிறுவனம் அந்த நிதியாண்டில் பெற்ற வருமானம் மற்றும் அடைந்த இழப்பு உள்ளிட்டவைகளை பொறுத்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது. வருமானவரியை அதிகமாக செலுத்தும்பட்சத்தில், அதை திரும்ப கோருவதற்கு, வருமாவனவரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தியாவில் இருந்தாலும், வெளிநாடுகளில் சொத்து வாங்கியவர்களெனில், அவர்களும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சாரிட்டபிள் டிரஸ்டு, அரசியல் கட்சி, மருத்துவ நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்டவைகளின் மூலம் வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வருமானவரி கணக்கை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? வருமானவரி கணக்கு தாக்கல் என்பது அந்த நிதியாண்டில், பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாய், அதற்கான வரி அம்சங்கள், ஏற்கனவே செலுத்தியுள்ள வரி விபரங்கள் ஆகும். அதிக வரி செலுத்தியிருந்தால், அதை திரும்ப கோருவதற்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது. கடனுதவி பெறுதல், கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பித்தல், நிறுவனங்கள் எனில், டெண்டருக்கு விண்ணப்பித்தல், ஸ்டார்ட்அப்நிறுவனம் என்றால், வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதியுதவி பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வருமானவரி கணக்கு தாக்கல் என்பது உங்கள் வருமானத்தின் சட்டப்பூர்வ ஆவணம் ஆகும். கடனுதவி பெறுதல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தல், அதிக வரி செலுத்தியிருந்தால், திரும்ப கோருவதற்கு என பல்வேறு விசயங்களுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் முக்கியமாக உள்ளது How to file an income tax return :
வருமானவரி கணக்கை எவ்வாறு தாக்கல் செய்வது?
வருமானவரி கணக்கு தாக்கல் என்பது எளிமையான நடைமுறை அல்ல. ஆனால், நமக்கு வரும் வருமானம், வரி பிடித்தம் போன்ற விபரங்களை தெரிந்துவைத்திருந்தால், வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது எளிதான ஒன்றே ஆகும். வருமானவரி கணக்கு தாக்கலை ஆன்லைன் அல்லது ஆப்லைனிலும் செய்யமுடியும். வருமானவரி ஆலோசகர் மூலமாகவும் நாம் வருமானவரி கணக்கு தாக்கலை செய்யமுடியும். வருமானவரி கணக்கு தாக்கலுக்கான படிவத்தை, வருமானவரித்துறையின் இணையதளத்தில் இருந்தோ அல்லது அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். வருமானவரித்துறையின் இணையதளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி, அதன்மூலமாகவே எளிதாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் நடைமுறைகளை முடித்தவுடன் ITR-V படிவம் வரும். அதை சரிபார்க்க 120 நாட்கள் வரை காலஅவகாசம் ஆகும். இந்த சரிபார்ப்பையும் ஆன்லைனிலோ அல்லது அலுவலகத்திற்கு சென்றோ செய்யலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U