👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டம்.
# 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் விபரங்களை தெரிவிக்க கல்வித்துறை உத்தரவு.
# அருகாமையில் இருக்கும் வேறு அரசு பள்ளிகள் உடன் இணைப்பதற்கு கல்வித்துறை திட்டம்.
10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் விபரங்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 153 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், அரசுப்பள்ளிகளில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளின் குழந்தைகளின் கல்வி தேவையை அரசுப் பள்ளிகள் தான் பூர்த்தி செய்கின்றன.நடப்பு கல்வியாண்டுக்காக விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் பள்ளிகள் திறந்த மறு தினமே 4 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியான தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். மாணவர் வருகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பள்ளிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூட வாய்ப்பில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், 10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றிய விவரங்களை இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு அருகே உள்ள பள்ளிகளின் விவரங்கள், இரண்டு பள்ளிகளுக்குமான தொலைவு ஆகியவற்றை தெரிவிக்கும்படி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவுள்ள வசதி, விவரம் மற்றும் சிரமங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இரு பள்ளிகளுக்கடையில் ஆறுகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளதா என தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் இணைப்புக்காக இந்த விவரங்கள் கேட்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பள்ளிகள் இணைப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில், இந்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U