இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய 50 கோடி ரூபாந் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்வரைவை வெளியிட்டது. தொடர்ந்து கல்விக் கொள்ளை குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு தனது முழுமையான அறிக்கை கடந்த மே 31ஆம் சமர்ப்பித்தது. இந்த வரைவு கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை இந்தி மொழியை நாடு முழுவதும் கட்டாயமாக்கும் நோக்கம் கொண்டது எனவும் பிற மாநில மொழிகளை பின்னுக்குத்தள்ளும் அபாயம் உள்ளது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியை கட்டாயமாக்கும் முயற்சி என தமிழ்நாடு, கர்நாடாகா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தி பேசாத கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்பலையால் முதலில் இந்தியைக் கட்டாயம் எனக் கூறிய மத்திய அரசு எதிர்ப்புக்குப் பின், இந்தி கட்டாயம் இல்லை என வரைவு அறிக்கையை மாற்றியது. விருப்பமான மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியைத் தேர்வு செய்யலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கூற, ஜூலை 31 வரை அவகாசம் உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய 50 கோடி ரூபாந் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 25 சதவீதத்துக்கு அதிகமான உருது மொழி பேசும் மக்கள் இருக்கும் பகுதிகளில் உருது மொழிக்கான ஆசிரியரையும் நியமனம் செய்யவும் இந்தத் திட்டம் மூலம் நிதியுதவி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பல தரப்பினரும் பதிவு செய்து வருகிறார்கள். புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு தமிழ் முதலான பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சுருக்கமாகவே வெளியிடப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்தி பேசாத மாநில மக்களுக்கு இந்தியை கற்பிக்க ஆசியர்களை நியமிப்பதற்காக நடப்பு 2019-20ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தெசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் படி, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் விதமாக இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று அறிவித்தற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்தி மொழி கட்டாயம் என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஸ், பிற நாடுகளில் எல்லாம் ஒரே மொழி தான் ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்களில் கூட, அரபு நாடுகளில் அரபி மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், ஜெர்மனியில் ஜெர்மன் மொழியும் தான். ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று குமுறி இருக்கிறார்.
அடுத்த திட்டம் ரெடி கடந்த 2014ஆம் ஆண்டில் முதன் முதலாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன், கங்கையை சுத்தம் செய்யப்போகிறோம் என்று சொல்லி ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அந்த திட்டத்தின் படி இது வரையிலும் உருப்படியாக எந்த வேலையையும் செய்து முடிக்கவில்லை. அதற்குள் இன்னொரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்தி ஆசிரியர்கள் தற்போது இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்காக, புதிதாக இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுமார் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது மோடியை திருப்தி படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் என்று பெரும்பாலானவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தி திணிப்பு ஆரம்பம் இந்தி மொழி தோன்றி சுமார் 150 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதோடு, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதம் மக்களே இந்தி பேசி வருகிறார்கள். ஆனால் தற்போது இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்ற மொழி பேசம் மக்களின் மனநிலமையை உணர்ந்து கொள்ளாமல், இந்தியை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரப்பும் வேலையை முடுக்கிவிட ஆரம்பித்து விட்டது போல் தோன்றுகிறது.
ரூபாய் நோட்டில் இந்தி கிடையாது பிரிட்டிஷ் இந்தியாவில், ஆங்கிலேயர்கள் மற்ற மொழிகளுக்கு அளித்த முக்கியத்துவதை இந்தி மொழிக்கு அளிக்கத் தயாராக இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கூறம் உண்மையாகும். இந்தியாவில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் கூட தமிழ், தெலுங்கு, உருது, பெங்காலி, பர்மிஸ், குஜராத்தி, கன்னடம் மற்றும் கெய்தி ஆகிய எட்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சி மொழி மற்றும் அரசு அலுவலக மொழி என்று பீற்றிக்கொள்ளக்கூடிய இந்தி மொழி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அச்சடிப்பட்ட ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் எந்த ரூபாய் நோட்டிலும் இந்தி மொழி அச்சிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தான் ரூபாய் நோட்டுக்களில் இந்தி மொழி அச்சடப்பட்டு வருகிறது. கடந்த 1970ஆம் ஆண்டுகளில் கூட இந்தித் திணிப்புக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசியதை அடுத்து இந்தித் திணிப்பு திட்டம் திரும்பப் பெறப்பட்டது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் இந்தியை நாடு முழுவதும் திணிக்கும் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தி பேசாத பிற மொழி பேசும் மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இந்தி மொழி கட்டாயம் என்ற வார்த்தை மட்டும் நீக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசும் தனது நிலையில் உறுதியாக நின்றது. இதனை அடுத்து மத்திய அரசு இந்திக்கு பதிலாக மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழி கற்பிக்கப்படும் என்று மாற்றியது.
சுஷ்மா ஸ்வராஜ் குமுறல் இது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிற நாடுகளில் எல்லாம் ஒரே மொழி தான் ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்களில் கூட, அரபு நாடுகளில் அரபி மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், ஜெர்மனியில் ஜெர்மன் மொழியும் தான். ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று குமுறி இருக்கிறார். இந்திக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில் இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தி கற்பிப்பதற்காக இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்காக சுமார் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் புதிய திட்டத்தின் படி 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக உருது மொழி பேசும் மக்கள் இருந்தால், அப்பகுதியில் உருது ஆசிரியர்களை நியமிக்கவும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews