பட்ஜெட் 2019: கல்வி, விளையாட்டுகளை மேம்படுத்த புதிய தேசிய வாரியம் அமைக்கப்படும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

பட்ஜெட் 2019: கல்வி, விளையாட்டுகளை மேம்படுத்த புதிய தேசிய வாரியம் அமைக்கப்படும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் படிப்பதற்கு ஈர்க்கும் வகையில் 'Study In India' திட்டம் கொண்டு வரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி தொடர்பாக அவர் பேசியதாவது: ‘மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் உயர்கல்வி முறை, உலகில் தலைச்சிறந்த கல்விமுறையாக வருவதற்கு இது உதவுகிறது. மேலும், அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், NRF- National Research Foundataion என்ற தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும். இதில் பல்வேறு அமைச்சகங்களில் இருந்து வழங்கப்படும் நிதி ஒருங்கிணைக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 'விளையாடு இந்தியா' என்ற திட்டம் விரிவுபடுத்தப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஊக்குவிக்கப்படும். வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
உயர்கல்வி வளர்ச்சிக்காக கியான் (Global Initiative of Academic Networks -GIAN) தொடங்கப்பட்டது. 2014ம் ஆண்டு வரையில், உலகின் டாப் 200 கல்வி நிறுவனங்களில் இந்தியா ஒரு இடம் கூட பெறவில்லை. ஆனால், தற்போது 3 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. மற்ற வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி படிப்பதற்காக ‘Study in India’ என்ற திட்டம் கொண்டு வரப்படும்’. இவ்வாறு பேசினார். தொடர்ந்து தொழில்வளர்ச்சிப் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், கிராத் தொழில்களை மேற்கொள்வதற்காக 75 ஆயிரம் தொழில் முனைவோர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார். தேனீ வளர்ப்பு, காகித் தொழில் மேம்பாட்டுக்காக 100 மையங்களும், 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் மையங்களும் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்தியாவைப் பொருத்த வரையில் கிரிக்கெட் விளையாட்டு மட்டும் மிக அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. உலகக் கோப்பையிலும் ஜொலிக்கின்றது. ஆனால் இந்த விளையாட்டு வளர்ச்சி மட்டும் இந்திய அணிக்கு சர்வதேச அரங்கில் அதிக பதக்கங்களைப் பெற்றுத் தராது. ஆதலால், இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக புதிய தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட் 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி தொடர்பாக அவர் பேசியதாவது: உயர்கல்விக்காக புதிய ஆணையம் 'மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் உயர்கல்வி முறை, உலகில் தலைசிறந்த கல்விமுறையாக வருவதற்கு இது உதவுகிறது. அதுமட்டுமின்றி, அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், NRF- National Research Foundataion என்ற தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும். இதில் பல்வேறு அமைச்சகங்களில் இருந்து வழங்கப்படும் நிதி ஒருங்கிணைக்கப்படும். விளையாடு இந்தியா இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'விளையாடு இந்தியா' என்னும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஊக்குவிக்கப்படும். மேலும், வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும். Global Initiative of Academic Networks -GIAN உயர்கல்வி வளர்ச்சிக்காக கியான் (Global Initiative of Academic Networks -GIAN) என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. 2014ம் ஆண்டு வரையில், உலகின் டாப் 200 கல்வி நிறுவனங்களில் இந்தியா ஒரு இடம் கூட பெறவில்லை. ஆனால், தற்போது 3 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி படிப்பதற்காக 'Study in India' என்ற திட்டம் கொண்டு வரப்படும். தொழில் முனைவோர்களுக்குச் சிறப்பு பயிற்சி தொழில் வளர்ச்சியில் கிராத் தொழில்களை மேற்கொள்வதற்காக 75 ஆயிரம் தொழில் முனைவோர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். தேனீ வளர்ப்பு, காகிதத் தொழில் மேம்பாட்டுக்காக 100 மையங்களும், 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் மையங்களும் உருவாக்கப்படும். காந்தி பீடியா என்ஷைலோ பீடியா திட்டம் (encylo pidia) போன்று "காந்தி பீடியா" என்னும் திட்டம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும். புதிய கல்வி கொள்கை கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். விளையாட்டில் பதக்கங்களைக் குவிக்க புதிய வாரியம் : இந்தியாவைப் பொருத்த வரையில் கிரிக்கெட் விளையாட்டு மட்டும் மிக அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. உலகக் கோப்பையில் ஜொலித்து வருகிறது. மேலும், பேட்மிண்டன், கபடி போட்டிகளில் இந்திய விளையாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆனால் இந்த விளையாட்டு வளர்ச்சி மட்டும் இந்திய அணிக்கு சர்வதேச அரங்கில் அதிக பதக்கங்களைப் பெற்றுத் தராது. எனவே, இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக புதிய தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். புதிய வாரியம்: இந்திய விளையாட்டுத் துறையை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். சர்வதேச அரங்கில் பதக்கங்கள் இந்த வாரியத்தில் அந்தந்த விளையாட்டில் பிரபல வீரர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளைப் படைத்த வீரர்கள் பயிற்சி தரும் வகையில் இருக்கும். இதனால் இந்தியா சர்வதேச அரங்கில் பதக்கங்களையும், கோப்பைகளையும் வெல்ல வாய்ப்பாக அமையும். பிரத்தியேக தொலைக் காட்சி இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. புதிதாக உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கு என பிரத்தியேகமாகத் தொலைக் காட்சி சேனல் துவங்கப்படும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews