நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இன்னும் அது நிறைவேறவில்லை. சேலம் இரும்பு உருக்காலையை தனியாரிடம் தாரை வார்ப்பதை தடுக்க ஒன்றாகக் குரல் கொடுத்துள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.காவிரி- கோதாவரி இணைப்புக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொண்டு இருக்கிறது. அறிக்கை தயார் செய்த பிறகுதான் எவ்வளவு நிதி தேவைப்படும் என கணக்கிட்டு மத்திய அரசு முடிவு எடுக்கும்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் அதிமுகவை வலுப்படுத்த ஓ.பி.எஸ்சும், நானும் அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருவதால் அமமுக கூடாரம் விரைவில் காலியாகும் என்றார். இதையடுத்து தென்காசியில் அமமுகவை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா, நேற்று நடந்தது. விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா தலைமையில் நெல்லை மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், ஆலங்குளம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வீரபுத்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி பிரிந்து சென்று மீண்டும் இணைந்தால் எவ்வளவு மகிழ்ச்சியிருக்குமோ அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. நமக்குள் பிரிவினை இருந்தது.
ஆனால் தற்போது நெலலை மாவட்டத்தில் ஒட்டுமொத்த அமமுக கூடாரமே காலியாக உள்ளது. இந்த இணைப்புக்கு நீங்கள் பரிசாக இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றியை பரிசாக தர வேண்டும். இதுதான் எனது வேண்டுகோள். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றோம். 9 சட்டமன்ற தொகுதிகளில் நாம் பெற்றதுதான் உண்மையான வெற்றி. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி கலைந்து விடும், கட்சி அழிந்து விடும் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தொடர்ந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். நெல்லை மாவட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளோம். நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார். இது அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews