முறைகேடுகளை தடுக்க சி.ஏ., சான்றிதழ்களுக்கு பிரத்யேக எண் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

முறைகேடுகளை தடுக்க சி.ஏ., சான்றிதழ்களுக்கு பிரத்யேக எண்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்'கள் அளிக்கும் சான்றிதழ்களுக்கு பிரத்யேக எண் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் போலி சான்றிதழ் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.வருமான வரி தாக்கல்நிறுவனங்களின் வரவு - செலவு கணக்கு கடன் தகுதி தணிக்கை சான்றிதழ் மற்றும் வங்கி நடைமுறை பங்குச் சந்தை வருமான வரி தாக்கல் உள்ளிட்ட பல்வேறு நிதி தொடர்பான விஷயங்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் - சி.ஏ. மூலம் அளிக்கப்படும் ஆவணங்கள் ஏற்புடையவையாக கருதப்படுகின்றன. நாட்டில் 1.5 லட்சம் முழு நேர தொழில் முறை சி.ஏ. க்கள் உள்ளனர்.இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் இன்ஸ்டிடியூட் - ஐ.சி.ஏ.ஐ. - செயலர் ஜலபதி நமது நிருபரிடம் கூறியதாவது:ஐ.சி.ஏ.ஐ. பிரத்யேக அடையாள எண் - யு.டி.ஐ.என். - திட்டத்தை அமலாக்கியுள்ளது. சி.ஏ. ஒருவர் மூலம் சான்றளிக்கப்படும் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்துக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது.
சான்றளிப்புபிப். 1 முதல் சான்றளிப்புகள் ஏப். 1 முதல் ஜி.எஸ்.டி. மற்றும் வரி தணிக்கை அறிக்கைகள் ஜூலை 1 முதல் அனைத்து அட்டெஸ்ட் நடவடிக்கைகளுக்கும் இந்த பிரத்யேக எண் நடைமுறைக்கு வந்துள்ளது.உதாரணத்துக்கு 19304576AKTSBN1359 என்ற அடையாள எண்ணில் முதல் இரண்டு இலக்கங்கள் - ஆண்டின் இறுதி இரண்டு இலக்கங்களையும், 304576 என்பது ஐ.சி.ஏ.ஐ. உறுப்பினர் எண்ணையும். AKTSBN1359 என்பது ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்ட எண்ணையும் குறிக்கும்.இந்த எண்ணின் உண்மைத் தன்மையை வங்கிகள் சோதித்துக் கொள்ளலாம். சான்றுக்கு கையெழுத்திடும் போது இந்த எண் உருவாக்கப்படுகிறது. முழு நேர சான்றளிப்பு நடைமுறையில் செயல்படும் சி.ஏ. க்கள் மட்டுமே 'யு.டி.ஐ.என். போர்ட்டல்' மூலம் பிரத்யேக எண்ணைப் பெற முடியும்.இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இந்திய பங்குச்சந்தை உள்ளிட்ட நிதி ஒழுங்குமுறை அமைப்புகள் யு.டி.ஐ.என். சான்றிதழ்களை கட்டாயம் கேட்டுப் பெறலாம். யு.டி.ஐ.என். எண் இல்லாமல் சான்றிதழ் வழங்கினால் சி.ஏ. க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஜலபதி கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews