கல்வி மானிய கோரிக்கை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2019

கல்வி மானிய கோரிக்கை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
110 விதியிலாவது சம்பள உயர்வு / பணிநிரந்தரம் அறிவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு மீண்டும் அழுத்தம். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இன்று வெளிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியதாவது. இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். எதையும் அறிவிக்கவில்லை. கல்வி மானியக் கோரிக்கையிலாவது அறிவிப்பார்களா என எதிர்பார்த்தோம்,இப்போதும் எதையும் அறிவிக்கவில்லை. இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதே கூட்டத்தொடரிலே முதல்வரின் 110விதி அறிவிப்பிலாவது மனிதநேயத்துடன் 12 ஆயிரம் பேர் குடும்பநலன் கருதி ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது.
9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 2011-12 கல்வி ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி பாடங்களில் பயிற்சி அளிக்க 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது. ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். சட்டமன்றத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து 2014ல் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22 ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சிலநாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதியஉயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க குறிப்பாணை பிறப்பித்தனர். இதனால் தொகுப்பூதியம் 7 ஆயிரத்து 700 ஆனது. ஆனால் SSA வின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களை பாரபட்சமாக நடத்திவிட்டனர். ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து முழுநேரமும் நடத்திவருகின்றர். எமிஸ், பவர் பைனான்ஸ், இமெயில், Computer Typing Work உள்ளிட்ட கணினி சம்மந்தபட்ட வேலை மட்டுமின்றி, பள்ளி நேரங்களில் தரப்படும் எல்லா விதமான வேலைகளையும் இந்த தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் பலன் எதுவுமின்றி செவ்வனே செய்து வருகிறார்கள்.
பாட ஆசிரியர்கள் பள்ளி வராத நாட்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் இவர்கள் பயன்படுத்தப்படும் விதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இவர்களின் வாழ்க்கைத்தரம் ஏறிவிட்ட விலைவாசியால் சிக்கலில் தத்தளிக்கின்றது. 8 எட்டு வருஷம் முடிந்து இப்போது 9வது வருஷம் ஆரம்பித்துவிட்டது. தொகுப்பூதியத்தை உயர்த்தி இருக்கலாம், சிறப்பு காலமுறை வழங்கி இருக்கலாம், காலமுறை ஊதியம் வழங்கி இருக்கலாம், ஆனால் இவற்றில் எதுவும் செய்யமல் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பள உயர்வைகூட நடைமுறைப்படுத்தாமல் இக்குறைந்த தொகுப்பூதியத்திலே நீண்டகாலமாக காலத்தை கடத்துவது எந்த வகையில் நியாயம்?. இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வழங்காமல் இருப்பது எதிர்காலத்தை பாதிக்கின்றது. கோவா மாநிலத்தில் ரூ.15ஆயிரம், ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரத்து 203 என அதிகபட்ச சம்பளம் இதே SSA பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த மாநில அரசுகளைப்போல குறைந்தபட்சம் அதே தொகுப்பூதியத்தை தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வோருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53ஆயிரத்து 400ஐ உடனடியாக வழங்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க 8 ஆண்டுகளுக்கும் போனஸ்கூட தரப்படாமல் உள்ளது. வேறெந்த துறைகளிலும் இதுபோன்ற நடந்ததில்லை. பகுதிநேர ஆசிரியர்களும் SSAவில் பணிபுரியும்போது, SSAவின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் கொடுத்துவிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம். எனவே 8 வருஷ போனஸ் நிலுவைத் தொகையை கணக்கிட்டு உடனடியாக வழங்கவேண்டும். மேலும், இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து குடும்ப நலநிதியாக ரூ.2 இலட்சம் உடனடியாக வழங்கவேண்டும். P.F, E.S.I உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 1325 உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வு நடத்தியபோதும், தற்போது நடந்த 814 கணினி ஆசிரியர்கள் தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்கள் முற்றிலும் முன்னுரிமைகூட தரமால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இதுபோன்று நடக்கிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட வேலையில் ஒப்பந்த பணியில் தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களில் விபத்து மற்றும் இயற்கை மரணம், 58 வயதை எட்டி பணிமூப்பில் பணி ஓய்வு, பணி ராஜிநாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள 4ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இலவசமாக படிக்க அரசே ஒருவகையில் ஊக்குவிக்கிறது. ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் 100 மாணவர்கள் என்ற விதியை தவிர்த்து பொது மாறுதலை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். முதலில் எங்களின் சம்பளத்தை பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலுடன் சேர்த்து கருவூலம் மூலமே ECS முறையில் வழங்குங்கள். தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்கி சம்பள பிடித்தம் செய்வதை தவிருங்கள். எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுங்கள். அரசியல் சாசனத்தின்படி சமவேலை சமஊதியம் கிடைக்க வழி செய்யுங்கள். ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துங்கள். மத்திய அரிசின் குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க ஆவண செய்யுங்கள். அனைவரையும் கல்வி தகுதிக்கேற்ப சிறப்பு தேர்வு நடத்தி அவரவர் பாடப்பிரிவுகளில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுங்கள்.
பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்கும் அறிவிப்பைகூட கல்வி மானியக் கோரிக்கையில் வெளியிடாதது பகுதிநேர ஆசிரியர்களை மத்தியில் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. எனவே இனியும் தாமதக்காமல் இதே கூட்டத்தொடரில் முதல்வரின் 110விதியிலாது பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு / பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. இவன், சி.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு. செல் : 9487257203.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews