👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி எதிரில் நடைமேம்பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து தெரிவிக்கும்படி தமிழக நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரங்கநாயகி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில், சுமார் 2,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். கேந்திர வித்யாலயா பள்ளி திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த பள்ளியின் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிக்கு வருவதற்காக, சாலையை எளிதாக கடக்கும் வகையில் வசதி இருந்தது. ஆனால் திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, அந்த வசதி இல்லை.
தற்போது சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கும் மாணவர்கள் அந்த சாலையின் குறுக்கே தடுப்புகளைத் தாண்டி பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், போக்குவரத்து காவல் இணை ஆணையர் சார்பாக திருமங்கலம் ஆய்வாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த பகுதியில் சாய்தள நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 2016 நவம்பரில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட சாலை மாநில நெடுஞ்சாலையில் வருவதால் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்று கூறி, மாநில நெடுஞ்சாலை செயலாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து, இதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U