👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடலூரில் சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி மூடப்பட்டதால் அதில் பயின்று வந்த ஆதரவற்ற மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தையற்ற ஆதரவற்றோர், மிகவும் ஏழ்மை நிலையில் கல்வி கற்க வாய்ப்பில்லாத மகளிர் ஆகியோர் கல்வி பயிலுவதற்காக 1962ம் ஆண்டு தமிழகத்தில் கடலூர், சேலம், திருநெல்வேலி, சிவகங்கை, தாம்பரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சேவை இல்ல பள்ளிகள் துவங்கப்பட்டன.
இந்த பள்ளிகளில் 14 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் தங்கி கல்வி பயின்றனர். அவர்களுக்கு பள்ளியிலேயே இலவச விடுதி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் தங்கள் கை குழந்தைகளுடன் இப்பள்ளியில் பயின்றனர். மேலும் இங்கு தையல் பயிற்சி, கம்ப்யூட்டர், தட்டச்சு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக இங்கு பிளஸ்2 வரை பயின்று பல பெண்கள் மேல் படிப்பு பயின்று வேலைக்கு சென்றனர். கைத்தொழில்கள் கற்றுக்கொண்ட பெண்கள் சுயதொழில் துவங்கினர். இவ்வாறு சேவை இல்ல பள்ளிகள் ஆதரவற்ற பெண்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தன.
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சேவையில்ல பள்ளி சமூக நலத்துறை கட்டுப்பாட்டிலும், 6 முதல் 8 வரையிலான சேவையில்ல பள்ளி சமூக பாதுகாப்பு துறையின் கீழும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் சமூக நலத்துறையின் கீழ் 57 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளிகளை கடந்த ஜூன் 30ம் தேதியுடன் மூடிவிடுமாறு அரசு அறிவித்தது. இது சேவையில்ல பள்ளிகளில் பயின்று வந்த மாணவிகளுக்கும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பள்ளிகளை மூட வேண்டாமென்று மாணவிகளும், ஆசிரியர்களும் கண்ணீர் மனுக்களை சமூக நலத்துறைக்கு அனுப்பினர்.
ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. போதுமான மாணவிகள் இல்லாமல் ஆசிரியர்களுக்கு வீணாக சம்பளம் தரப்படுவதாக சமூக நலத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் மூடப்பட்டாலும் சேவை இல்ல விடுதியில் தங்கி வெளியே உள்ள அரசு பள்ளிகளில் மாணவிகள் பயிலலாம் எனவும் அறிவித்தனர். ஆனால் கடலூரில் இயங்கி வந்த சேவை இல்ல பள்ளியில் அதிக அளவில் 120 மாணவிகள் பயின்று வந்த நிலையில் இந்த பள்ளியையும் ஏன் மூடினார்கள் என கேள்வியும் எழுந்துள்ளது.
கடலூர் சேவை இல்ல பள்ளி ஜூன் 30ம் தேதியுடன் மூடப்பட்டது. அங்கு பயாலஜி பயின்ற மாணவிகள் தற்போது 2 கிமீ தூரத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், வணிகவியல் பயின்ற 29 மாணவிகள் 3 கிமீ தூரத்தில் உள்ள மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், அதுபோல் நர்சிங் பயிலும் மாணவிகள் 5 கிமீ தூரத்தில் உள்ள முதுநகர் அரசு பள்ளிக்கும் சென்று படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்வதற்கு மாணவிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும் அல்லது இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும். இதற்கு மாணவிகள் நாளொன்றுக்கு ரூ.20 செலவு செய்ய வேண்டியுள்ளது. இலவச பஸ் பாஸ் வழங்கப்படாத நிலையில் கையில் பணமும் இல்லாத நிலையில் கடந்த ஒரு வாரமாக மாணவிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தனியார் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் மாதத்திற்கு மாணவிகள் ரூ.250 செலுத்த வேண்டியுள்ளது. இந்த பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாணவிகள் கைகளை பிசைந்தபடி உள்ளனர். இதனால் மன பாதிப்புக்கும் அவர்கள் ஆளாகியுள்ளனர். வேனுக்குரிய செலவினை சேவை அமைப்புகள் ஏற்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதிக்கு வீதி சாராய கடைகளை ஆர்வத்துடன் திறந்து வரும் தமிழக அரசு, ஆதரவற்ற பெண்கள் பயின்று வந்த சேவை இல்ல பள்ளிகளை மூடியது பெரும் பாவச் செயல் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேவை இல்லத்தில் பாதுகாப்பான மன நிலையில் கல்வி பயிலவும் கைத்தொழில்கள் கற்றுக்கொள்ளவும், தங்களை போன்ற பெண்களுடன் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் முடிந்தது. ஆனால் தற்போது சேவை இல்ல பள்ளி மூடப்பட்டது தங்களை பாதித்துள்ளதாக மாணவிகள் கூறுகின்றனர். பள்ளிக்கு சென்று வருவதற்குரிய போக்குவரத்திற்காக மாவட்ட ஆட்சியரிடமும் மாணவிகள் மனு அளித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U