ஓய்வுபெறும் ஆசிரியருக்கு ஊதிய பலன் ஆணை வழங்க மகளுக்கு பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் கல்வி அலுவலர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

ஓய்வுபெறும் ஆசிரியருக்கு ஊதிய பலன் ஆணை வழங்க மகளுக்கு பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் கல்வி அலுவலர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் ஓய்வு பெறும் ஆசிரியரிடம் ஊதிய பலன் ஆணை வழங்குவதற்காக தனது கடனை தீர்க்க, அல்லது மகளின் ஸ்கூல் பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலரின் ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிதியுதவியுடன் கூடிய சிறுபான்மையினர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள இந்த சிறுபான்மையினர் பள்ளிகள் மாதனூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.இதில் ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியின் ஆசிரியர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு ஊதிய பலன்களுக்காக விண்ணப்பித்திருந்தார். தற்போது இதற்கான ஆணை வழங்க மாநில கணக்கு அலுவலகத்தில் இருந்து மாதனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரியும் மாதேஷ்க்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில், வட்டார கல்வி அலுவலர் மாதேஷ், அந்த பள்ளியின் தலைமையாசிரியரை போனில் தொடர்பு கொண்டு ஓய்வு நிதி வழங்க அந்த ஆசிரியரின் ஓய்வூதிய பலனில் இருந்து தனக்கு உள்ள ஒரு கடனை தீர்க்கவோ அல்லது தனது மகளின் கல்வி கட்டணத்தை செலுத்தவோ பணம் கேட்கும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடல் விவரம்: தலைமை ஆசிரியர்: அய்யா வணக்கம். கல்வி அலுவலர்: சார், உங்களின் (ஆசிரியரின் பெயர் தெரிவித்து) சாங்ஷன் ஆகி வந்திருக்கு ... ஹெச்.எம்.: ரொம்ப சந்தோஷம்... ரொம்ப சந்தோஷம்... நல்ல இனிமையான செய்தி கொடுத்திருக்கீங்க. கல்வி அலுவலர்: அவங்களுக்கு சூப்பர் ஆன்னுவேஷன் கொடுத்திருக்கா.... ஹெச்.எம்.:கொடுத்திருக்குது...6.. 8 மாசம் கொடுத்திருக்கு... கொடுத்து சூப்பர் ஆன்னுவேஷன் பே எல்லாம் சாங்ஷன் ஆகி சம்பளம் எல்லாம் கொடுத்திருக்கு. கல்வி அலுவலர்: இப்போ அவங்களுடைய சாங்ஷன் ஆர்டர் வந்திருக்கு... ஹெச்.எம்.:சரி. சரி... அந்த டீச்சரை கூப்பிட்டு பேசறேன்... அவங்களுக்கும் ஒரு காபி வரும் இல்ல அது.... கல்வி அலுவலர்: ஆம்.... வரும் ஹெச்.எம்.:இப்போ அவங்க லைன்ல போயிட்டு பேசிட்டு வர்றேன்... கல்வி அலுவலர்: நிறைய வருதுங்க அரியர்.... நீங்க தான் பாக்கணும்.. ஹெச்.எம்.:சரி... கண்டிப்பா.... கண்டிப்பா... கல்வி அலுவலர்: அவங்களால ஏதாவது ஒரு கடன்... தலைமை ஆசிரியர்: புரிஞ்சிகிட்டேன் கல்வி அலுவலர்: கடன் தீர்க்கட்டும்.. இல்லன்னா... ஏதாவது ஒரு பாப்பாவிற்கு பீஸாவது கட்ட பாருங்க... ஹெச்.எம்.:கண்டிப்பா.... கல்வி அலுவலர்: நிறைய வருதுங்க... பாருங்க... இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது. கேரளாவில் படித்து வரும் தனது மகள் ஒருவருக்கு கல்வி மற்றும் இதர கட்டணம் கட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆவதாகவும், அந்த தொகையை தரவும் வட்டார கல்வி அலுவலர் நிர்ப்பந்தித்து வருவதாகவும் மாதனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் அவரது ஊதிய பலன்கள் வழங்க கல்வி அலுவலர் லஞ்சம் கேட்கும் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கல்வி அலுவலரின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதோடு அவர் மீது, கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews