புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள், 10 ஆயிரம் தடுப்பணைகள்..: பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள், 10 ஆயிரம் தடுப்பணைகள்..: பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: *தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் ரூ. 9.58 கோடி செலவில் அமைக்கப்படும். 2019-2020ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி உள்ள நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
*திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். *மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும். *சேலத்தில் ரூ.1 கோடியில் துணை பதிவுத்துறை அலுவலகம் கட்டித் தரப்படும். *5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும். *கஜா புயலால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் ரூ.200 கோடி செலவில் மேம்படுத்தப்படும். *மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11, 441 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.12,500 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
*தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்படும். *ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தேவைக்கேற்ப கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக நடப்பாண்டில் ரூ. 125 கோடி செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். *சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக ரூ.202.40 கோடி மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews