ஆன்லைன் கவுன்சிலிங் சாய்ஸ் பில்லிங் எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

ஆன்லைன் கவுன்சிலிங் சாய்ஸ் பில்லிங் எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும், ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இன்ஜினியரிங் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்... ’சாய்ஸ் பில்லிங்’ நீங்கள் பெற்றிருக்கும் ‘கட்-ஆப்’ மற்றும் தரவரிசைக்குத் தகுந்தாற் போல், இடம் கிடைக்க வாய்ப்புள்ள, அதேநேரம் நீங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் விரும்பும் பாடப்பிரிவை தேர்வு செய்து வரிசைப்படுத்துவதே ’சாய்ஸ் பில்லிங்’! இதற்கு, நீங்கள் விரும்பும் கல்லூரி முந்தைய ஆண்டுகளில் பெற்ற குறைந்தபட்ச ‘கட்-ஆப்’ மதிப்பெண் மற்றும் தரவரிசையை, உங்களது ‘கட்-ஆப்’ மதிப்பெண் மற்றும் தரவரிசையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓரளவு பலனைத் தரும். என்றாலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கல்லூரிகளின் ‘கட்-ஆப்’ நிச்சயம் இருக்காது. அதேதருணம், கடந்த ஆண்டு &'கட்-ஆப்’ விட இந்தாண்டு 20 வரை குறையவே அதிக வாய்ப்புள்ளது. நீங்கள் பெற்ற ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை விட, உங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் கடந்த ஆண்டில் அதிகமான ‘கட்-ஆப்’ பெற்றிருந்தாலும், அதில் உங்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, அந்த கல்லூரிகளுக்கு உங்களது பட்டியலில் முதலிடம் தருவது சிறந்தது. உங்களது ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணிற்கும் கீழ் உள்ள கல்லூரிகளில், உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே பிரகாசமாகத்தான் உள்ளது. ஆகையால், அந்த கல்லூரிகளுக்கு உங்களது விருப்பப் பட்டியலில் கடைசி இடம் அளிக்கலாம்.
உதாரணமாக, உங்களது ‘கட்-ஆப்’ 175 என்றாலும், 195 ’கட்-ஆப்’ பெற்ற கல்லூரிகளையும் தயங்காமல் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் சேர்க்கலாம். அதிலிருந்து படிப்படியாக, குறைவான ‘கட்-ஆப்’ பெற்ற கல்லூரிகளை விருப்பத்திற்கு ஏற்ப பதிவிடலாம். விருப்பத்தை பதிவிடுவதில், எண்ணிக்கை கட்டுப்பாடு ஏதும் இல்லாததால், ஆயிரம் விருப்பங்களைக் கூட நீங்கள் பட்டியலிடலாம். ஆகையால், இடம் கிடைப்பதற்கு கடினமான கல்லூரிகளையும் விட்டு விடாமல், உங்களது பட்டியலில் விருப்பத்திற்கு ஏற்ப முதலிலேயே சேர்த்துக்கொள்வது, சிறந்த கல்லூரி கிடைப்பதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கும். பட்டியலிடுவது எப்படி? கல்லூரிகளை ஆராய்ந்து, அவற்றில் உங்களுக்கு மிகவும் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை, உங்களது பட்டியலில் முதலிலும், அதைத் தொடர்ந்து விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளை கீழ்நோக்கி அடுத்தடுத்து வரிசைப்படுத்தலாம். ஏனெனில், உங்கள் விருப்பப் பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால், அதை விடச் சிறந்த கல்லூரி, உங்களது விருப்பப் பட்டியில் கீழே குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதை உங்களால் பின்னர் தேர்வு செய்ய முடியாது. ஆகையால், இந்த விருப்பப் பட்டியலில் கல்லூரிகளை அதிக கவனத்தோடு வரிசைப்படுத்துவதே சரியான கல்லூரியில் உங்களது வாய்ப்பை உறுதி செய்யும்.
‘ஷேர்’ பண்ணாதீங்க... கல்லூரி ’கோட்’ மிகவும் முக்கியம். மாணவர்கள் எளிதாக அடையாளம் காணவும், ஒரே பெயரில் உள்ள பல கல்லூரிகளை வேறுபடுத்திக்கட்டவும், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்பட்டிருக்கும். மற்றொரு முக்கியமான விஷயம், உங்களது ஆன்லைன் கவுன்சிலிங் ‘யூசர்நேம்’, பாஸ்வேர்டு, இ-மெயில் பாஸ்வேர்டு, மொபைல் ஓ.டி.பி., ஆகியவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்! விபரங்களுக்கு: www.tneaonline.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews