ஓய்வூதியர்கள் நலனுக்காக நீதிமன்றத்துக்கு செல்வோம்: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

ஓய்வூதியர்கள் நலனுக்காக நீதிமன்றத்துக்கு செல்வோம்: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
“சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாததால், ஓய்வூதியர்களுக்கு நியாயம் கோரி நீதிமன்றம் செல்வோம்” என்று தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களில் பணியாற்றி பதவி உயர்வில் சென்ற மகளிர் ஊர்நல அலுவர், தொகுதி மேற்பார்வையாளர்கள், பிற துறைகளுக்கு சென்ற பணியாளர்களுக்கு வாழ்வாதார ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பலமுறை அரசிடம் மன்றாடி கேட்டோம். ஆனால், பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 10ம் தேதி(நேற்று) சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக்கோரிக்கையின் போது கோரிக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்தோம். ஆனால் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக்கோரிக்கையில் ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது ஓய்வூதியம் இல்லாத நிலையில் தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மையங்களிலேயே ஒரு வேளை உணவுக்காக தட்டு ஏந்தி உணவு பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதே போல் 3,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாறி 3 வேளை உணவு கிடைக்க சிறைக்கு செல்லவும் தயார் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு இவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு நியாயம் கோரி நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஓய்வூதியம் இல்லாத நிலையில் தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மையங்களிலேயே ஒரு வேளை உணவுக்காக தட்டு ஏந்தி உணவு பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews