பள்ளிகளில் திருக்குறள்... ரூ. 25 கோடி செலவில் ராஜேந்திர சோழன் சிலைகள்... கம்போடியாவில் பரவும் தமிழ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

பள்ளிகளில் திருக்குறள்... ரூ. 25 கோடி செலவில் ராஜேந்திர சோழன் சிலைகள்... கம்போடியாவில் பரவும் தமிழ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Cambodian school system announced Thirukkural syllabus: கல் தோன்றி மண் தோன்றா மூத்த காலத்து மொழி எங்கள் மொழியாம் என்பதில் தான் எத்தனை பெருமை விளைகிறது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிக மக்களால் பேசப்பட்டு வரும் மொழியாகவும், இலங்கையின் அலுவல் மொழியில் ஒன்றாகவும் இருக்கிறது தமிழ். இன்று நுழைவு தேர்வினை தமிழில் எழுதவும், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் பெறவும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், கம்போடியா அரசு தமிழ் மக்கள் மனம் குளிரும் வகையில் ஒரு செய்தி ஒன்றை கூறியுள்ளது. மிகவிரைவில் தமிழுக்கான முழு அங்கீகாரம் கம்போடியாவில் வழங்கப்படும் என்று சமீபத்தில் எழுந்த பேச்சுகளை தொடர்ந்து, கம்போடிய அரசு தங்களின் மாணவர்களுக்கு திருக்குறளை போதிக்க உள்ளது. உலக பொதுமறை என்றும், சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைவருக்கும் பொதுவான ஒரு படைப்பாக இருக்கும் திருக்குறளை அந்நாட்டுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இணைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் சமீபமாக ராஜேந்திர சோழன் மற்றும் கெமர் நாட்டு அரசர் முதலாம் சூர்யவர்மன் ஆகியோருக்கு 2022ம் ஆண்டு சிலை திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கம்போடிய கலாச்சார அமைச்சத்தின் பிரதிநிதியான பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்பின் தலைவர் தணிகாச்சலம், திருக்குறள் தமிழில் இருந்து கெமெர் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைக்கப்படும் என்று அறிவித்தார். தமிழக மற்றும் கெமர் பேரரசர்களின் நட்புறவுகளை பாராட்டு விதமாகவும், நினைவு கூறும் விதமாகவும் இவ்வேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார். ராஜேந்திரன் சோழனின் சிலையை திறக்க நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்றும், இரு நாடுகளில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்த சிலைகள் சுமார் 25 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட உள்ளது. காஞ்சி, சிதம்பரம், தஞ்சை மற்றும் மல்லையில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள் சிலர் தமிழகம் வந்து சென்றனர். அவர்கள் தமிழகம் வந்ததன் நோக்கம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாகக் கருதப்படும் அரசியல் மற்றும் கலாசார ரீதியிலான தோழமை உறவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டே! அப்படி அமைந்த பயணத்தில் அன்றைய பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்த நட்புறவைப் பறைசாற்றும் வண்ணம் பல சான்றுகளை அவர்கள் நேரில் கண்டு சென்றிருந்தார்கள். அந்தப் பயணத்தின் எதிரொலியாகக் கூடியவிரைவில் கம்போடியாவில் ரூ 25 கோடி செலவில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், கம்போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பைப் பறைசாற்றும் விதமாக இருவருக்குமாக சிலைகளை உருவாக்கி அந்தச் சிலைகளை 2022 ஆம் ஆண்டில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறப்புவிழா நடத்தவிருப்பதாக கம்போடிய அரசு அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் கம்போடியாவுக்குமான உறவுப்பாலத்தை மேலும் உறுதியாக்கும் விதத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கம்போடிய அரசுப் பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்கவும் ஆணையிடப்பட்டிருப்பதாகத் தகவல். இந்தச் சீரிய பணியை அங்கோர் தமிழ்ச் சங்கமும், பன்னாட்டுத் தமிழர் நடுவமும் இணைந்து நடத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மன்னர்களின் சிலை திறப்பு விழா நிகழ்வை கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகமும் சீனு ஞானம் ட்ராவல்ஸும் ஏற்று நடத்தவிருப்பதாக கம்போடிய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1330 குறள்களைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் இதுவரை உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலிருக்கும் மக்களுக்கும் பொருத்தமான வாழ்வியல் நீதிநெறிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வதில் வியப்பேதும் கொள்ளத் தேவையில்லை. கூடிய விரைவில் திருக்குறள் இன்பத்தை கம்போடியர்களும் அறியவிருக்கிறார்கள் என்பது அதன் பெருமைக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews