புதிய கல்விக்கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்து சரியானவை: எஸ்.ஏ.சந்திரசேகர்& கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

புதிய கல்விக்கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்து சரியானவை: எஸ்.ஏ.சந்திரசேகர்& கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்துக்கு திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்பு அளித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்துக்கள் சரியானவை என்று சென்னையில் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார். இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் அனைவரிடமும் கேட்காமல், எப்படி பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்கலாம்? அவர் எப்போதும் சங்க கூட்டத்திற்கு வருவதே இல்லை. கடந்த முறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரைக கடவுளாக்க வேண்டாம். அவரும் அதை விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். மற்றவர்களை போல் அவரும் தேர்தலில் நின்று ஜெயித்து வரட்டும். அது தான் ஜனநாயகம் என்று கரு.பழனியப்பன் பேசினார். இந்த நிலையில் இயக்குநர் சங்கத் தேர்தல் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கு முனையாக இயக்குநர் அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமீரின் தலைவர் பதவிக்கான மனு மறுக்கப்பட்டதால் அமீர் தேர்தலில் இருந்து மொத்தமாக பின் வாங்கினார் இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் தொடங்கியது. தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்று வருகிறது. செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செல்வமணி தலையிலான அணி ஜெயிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் இன்று தேர்தலில் வாக்களித்து விட்டு, பேசிய விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரிடம் சூர்யா நீட்டுக்கு எதிராக பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. அது எல்லோருக்கும் நடந்துள்ளது. அது போலவே சூர்யாவிற்கும் நடந்துள்ளது. இருந்தாலும் இது போன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews