சென்னை பல்கலையில் பதவி உயர்வு சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

சென்னை பல்கலையில் பதவி உயர்வு சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலைக்கழகத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கான சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி உள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்னளர். ஆனால் அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.சென்னை பல்கலைக்கழகத்தில் 2009ம் ஆண்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் அலுவலக உதவியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த அலுவலர்கள் சீனியாரிட்டி பட்டியல் குளறுபடி நடந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:ஏற்கனவே சீனியாரிட்டி பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தவர்களை பல இடங்கள் பின்னுக்கு தள்ளியுள்ளனர். திட்டமிட்டு குறிப்பிட்டவர்களை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனியாரிட்டி பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே போல், எழுத்துத்தேர்வு முடிவு அடிப்படையிலும் இந்த சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படவில்லை. எங்களுக்கு பின்னால் பணிக்கு சேர்ந்த 27வது பேட்ச்சை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, சீனியாரிட்டி பட்டியலை தயாரித்துள்ளனர். இதனால் எங்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை கேட்டும் உரிய பதிலளிக்கவில்லை.
எங்களின் முன்னுரிமை பறிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது அவர்கள் கூறியதாவது:குறிப்பிட்ட 100 அலுவலக உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டபோது, முறையான இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவில்லை. சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசாணைகள் உள்ளன. அந்த அரசாணைகளை பின்பற்றி, சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே தவறான நடைமுறை பின்பற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதால் சீனியாரிட்டி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவரையும் அந்தந்த இடத்தில் மட்டுமே பணியில் அமர்த்த முடியும். ஆனால் குறிப்பிட்ட ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதால், தேர்வு முடிவை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். விதிகளின்படி உருவாக்கப்பட்டுள்ள சீனியாரிட்டி பட்டியல் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த குழுவில் அரசுத்துறை செயலாளர்கள் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பிட்ட ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கவர்னர் மாளிகையில் இருந்து விளக்கம் கேட்டிருந்தனர். அதற்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews