👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருகிறோம் என்று வாக்குறுதிகளை மாணவர்களுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு தடை விதிக்ககோரி கடந்த 2018ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தற்கொலை எண்ணத்தை போக்க மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும். என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு சரியாக செயல்படுத்தவில்லை என்று, வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியின் காரணமாக, திருப்பூர் ரீத்து, விழுப்புரம் மோனிஷா, தஞ்சாவூர் வைஷ்யா ஆகிய மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சூரியபிரகாசம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அரசு இன்று விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘ நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தருவோம், என அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். விலக்கு பெறுவதில் உறுதியாக இருந்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார். .
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U