பொறியியல் கல்லூரிகளில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

பொறியியல் கல்லூரிகளில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது ஏன்?: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் உதவும் வகையில் மத்திய அரசின் உதவியுடன், உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தநிலையில், 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018-19ம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசும், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே இந்த இரண்டு உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி ஆஜராகி, 2018-19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ள நிலையில், அவர்களுக்கு கல்வி கட்டண உதவித்தொகை நிராகரித்தது சட்டவிரோதமானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் இருப்பதாகவும் வாதிட்டார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews