👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூரில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நடுத்திட்டு, வீரநத்தம், திருநாரையூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இடவசதி இல்லாத காரணத்தால், உயர் நிலை வகுப்புகளுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டது. 2011ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசு சார்பில் நபார்டு வங்கியின் நிதியுதவியில் ரூ.1.66 கோடி செலவில் 3 தளம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் தாமதம் ஆனதால், கடந்த 2014ம் ஆண்டு 6 முதல் 10ம் வகுப்பு வரை பிரிக்கப்பட்டு, அதே ஊரில் உள்ள புயல் மற்றும் வெள்ள மறுசீரமைப்பு மைய கட்டிடத்திற்கு தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது. ஐந்து கல்வியாண்டுகள் கடந்தும், இப்பள்ளி இன்னும் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு புதிய பள்ளி கட்டிட பணிகள் நிறைவு பெற்றது. ஆனால் பள்ளி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது ஆடு, மாடு மேய்க்கும் அப்பகுதி மக்கள் நிழலில் ஓய்வெடுப்பதற்கு புதிய பள்ளி கட்டிடம் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் இப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பள்ளிக்கு தேவையான சாலை, சுற்றுச்சுவர்கள் போன்ற முக்கிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பள்ளிக்கு பொதுவாக ஒதுக்கப்பட்ட இரண்டு புறமும் வீதிகள் உள்ளன. இதில் சாலை அமைக்க நிதி ஒதுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது. மேலும் கடந்த 4 வருடங்களாக குறிப்பிடும் வகையில் மிகப்பெரிய புயல் மற்றும் வெள்ள அபாயங்கள் ஏற்படாத காரணத்தால், புயல் பாதுகாப்பு மையத்தில் பள்ளி செயல்படுவதில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால், எதிர்வரும் பருவமழை காலங்களில் புயல், வெள்ள அபாயம் ஏற்படும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் போய்விடும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதிய பள்ளி கட்டிடத்திற்கு புதிய தரமான சாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் போன்றவைகளை ஏற்படுத்தி பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U