நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்துக்கு தடை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2019

நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்துக்கு தடை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடிகை ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்துக்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது. ராட்சசி படத்தில் உள்ள சர்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ராட்சசி. இதில் அரசு பள்ளிகளின் அவலங்கள் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டது. இது அரசு பள்ளி ஆசியர்களிடைய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ராட்சசி படத்தை கடுமையாக விமர்சித்தனர். அந்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:ஜோதிகா நடிப்பில் ஜூலை 5ஆம் தேதியன்று வெளியான ராட்சசி திரைப்படம், அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறிக்கொண்டு சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.முற்போக்கு போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி திரைப்படம்.
அரசுப் பள்ளிகள் குப்பை, அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது, ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என தவறான வசனங்கள் படத்தில் உள்ளன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் இழிவுபடுத்தி பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துகளை பதிவு செய்தால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க எப்படி முன்வருவார்கள்? இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயற்சியே. கல்வித்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்குவதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் இப்படம் உள்ளது.
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ராட்சசி ஜோதிகாவும், சாட்டை சமுத்திரக்கனியும் முனைவது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் ஒரு ஆசிரியரை உயர்வாக காட்டி ஒட்டுமொத்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது சேற்றைவாரி இறைப்பது எவ்விதத்தில் நியாயம்?2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அங்கீகாரமின்றி இயங்கி வருகிறதே. கும்பகோணம் தனியார் பள்ளியில் 90 குழந்தைகள் தீயில் கருகி இறந்தார்களே மருந்துக்குக்கூட அதுபற்றி படத்தில் வசனமில்லை. முற்போக்கு சிந்தனை படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை? அரசுப் பள்ளியின் கல்வித் தரமும் ஆசிரியர்களின் அறப்பணியும் நேரில் சென்று பார்த்தால் தெளிவாகப் புரியும். அரசுப் பள்ளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ராட்சசி படத்தினை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் சங்க நிர்வாகிகள் நாளை சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்க உள்ளனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews