பொறியியல் மாணவர்களே எச்சரிக்கை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

பொறியியல் மாணவர்களே எச்சரிக்கை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிகர்நிலை பல்கலைகழகங்கள் பெருமளவு பெற்று விடுவதால், தனியார் பொறியியல் கல்லூரிகள் குறுக்கு வழியில் முறைகேடாக மாணவர்களை சேர்க்கின்றன. மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... ஆன்லைன் மோசடியில் திருடப்படுவது பணம் மட்டுமல்ல.. படிக்க திட்டமிட்டிருந்த கல்வியும் தான்.. என்ற நிலை தனியார் பொறியியல் கல்லூரிகளால் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் 5 கட்டங்களாக நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 8 ஆம் தேதி தொடங்கியது. தற்போது 2 வது கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இம்மாதம் 30 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 10 நிகர்நிலை பல்கலைகழகங்கள் உள்ளன. மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகே பொறியியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் இறுதியில் பிளஸ் 2 ரிசல்ட் வந்த உடன், மே மாதமே பொறியியல் மாணவர் சேர்க்கையை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தி முடித்து விடுகின்றன. எளிதில் பொறியியல் படிப்பை முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடுகின்றனர். ஆய்வக வசதி, போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக புகார் உள்ள நிலையில், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் இதனை முறையாக கண்காணிப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முதலிலேயே மாணவர்களை சேர்த்து விடுவதால், தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு நூதன முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
பல்வேறு முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காகவே ஆன்லைன் கலந்தாய்வு முறையை கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. மாணவர்களே நேரடியாக பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வதற்கு லாகின் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன. வீட்டில் இருந்த இடத்தில் இருந்தே படிக்க விரும்பும் கல்லூரியை எளிதில் தேர்வு செய்யலாம் என்பதால், இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆன்லைக் கலந்தாய்விலும் குறுக்குவழியை கண்டுபிடித்து சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் பணிபுரியும் கடைமட்ட ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உதவியுடன், பொறியியல் படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் டேட்டாவை தனியார் பொறியியல் கல்லூரிகள் வாங்கி விடுகின்றன. அதற்காக சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கைமாறுவதாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் மாணவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களது லாகின் ஐடி, பாஸ்வேர்டை சமயோசிதமாக பேசி பெற்று விடுகின்றனர். அதனைக் கொண்டு தங்களது கல்லூரியை அந்த மாணவரே தேர்வு செய்தது போன்று லாகின் செய்து பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாய்ராம் பொறியியல் கல்லூரி இதே போன்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த கல்லூரி நிர்வாகம் அதனை மறுத்து இருந்தது. இந்த நூதன மோசடியால் அப்பாவி கிராமப்புற மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளில் சேர முடியாமல், லட்சக்கணக்கில் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு முறை லாகின் செய்து கல்லூரியை தேர்வு செய்த பின்னர் மாற்ற முடியாத நிலை உள்ளதால், இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிண்டியில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து, கடிதம் எழுதி வாங்கிய பின்னர் மீண்டும் புதிதாக கல்லூரியை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நூதன மோசடியில் சிக்கி ஏமாறாமல் இருக்க மாணவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் லாகின் ஐடி, பாஸ்வேர்டை கொடுக்க வேண்டாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பித்தலாட்டத்தில் ஈடுபடும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது, அண்ணா பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மீண்டும் இந்த மோசடிகள் நிகழ்வது தடுக்கப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews