ஓய்வூதியம் வழங்காவிட்டால் சட்டசபை கூட்டத் தொடர் முடியும் முன்பாக மிகப்பெரிய போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

ஓய்வூதியம் வழங்காவிட்டால் சட்டசபை கூட்டத் தொடர் முடியும் முன்பாக மிகப்பெரிய போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10ம் தேதி நடைபெற உள்ள மானியக்கோரிக்கையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வாழ்வாதார ஓய்வூதியம் அறிவிப்பு வெளியிடாவிட்டால், சட்டசபை கூட்டத் தொடர் முடியும் முன்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்வி தகுதிக்கு ஏற்ப குறைந்தபட்சம் சத்துணவு அமைப்பாளர் பணி வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த கோரிக்கை தினகரன் நாளிதழில் பிரசுரம் செய்தன் எதிரொலியாக கடந்த 17ம் தேதி, நீண்ட நாளைய கோரிக்கையான கல்வி தகுதிக்கு ஏற்ப குறைந்தபட்சம் சத்துணவு அமைப்பாளர் பணி வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை போல திட்டத்தின் முதுகெலும்பாய் செயல்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய வாழ்வாதார ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அதனை குடும்ப ஓய்வூதியமாக மருத்துவ காப்பீட்டுடன் வழங்க வேண்டும். மேலும் பதவி உயர்வில் சென்ற மகளிர் ஊர்நல அலுவலர், தொகுதி மேற்பார்வையாளர் கிரேடு 1, கிரேடு 2 மற்றும் பிறதுறைகளுக்கு சென்றவர்களுக்கு பணி ஓய்வு பெற்ற பின் வாழ்வாதார ஓய்வூதியம் இல்லாமல் வறுமையில் வாடும் அவலநிலை உள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் இது நாள் வரை மனிதாபிமான அடிப்படையில் அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால், ஊருக்கு சோறு போட்ட ஊழியர் இல்லத்தில் சோறுக்கு வழியில்லாம் தள்ளாத வயதின் பசியின் கொடுமையில் மாய்ந்து வரும் நிலை தொடர்கிறது. பாலைவனத்தில் பரிதவிக்கும் மான்களாய் சிக்கி தவிக்கும் இவர்களது அவலநிலையினை வருகிற 10ம் தேதி நடைபெற உள்ள சமூக நலம் மற்றும் சத்துணவு துறை மானிய கோரிக்கையிலாவது அரசு நிறைவேற்ற வேண்டும். இது தமிழகம் முழுவதும் உள்ள பணி ஓய்வு பெற்ற பணியாளர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. எங்களது நியாயமான கோரிக்கை மானியக்கோரிக்கையில் நிறைவேற்றப்படவில்லை எனில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்கு முன்பாக சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews