மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நிதியுதவி பள்ளிகள் அரசு நிதியுதவியை தக்க வைக்க மோசடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நிதியுதவி பள்ளிகள் அரசு நிதியுதவியை தக்க வைக்க மோசடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசின் நிதியுதவி மற்றும் பிற சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்காக அரசுப்பள்ளி மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்களை தங்கள் பள்ளிக்கு மாற்றி அவர்களின் எதிர்காலத்துடன் நிதியுதவி பள்ளிகள் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு பள்ளிக்கல்விதுறைக்கு 2018-19ம் ஆண்டில் 27,205 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில், அரசு, அரசு நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தங்கள், நோட்டுப்புத்தகங்கள், நான்கு செட் சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, கிரையான் பென்சில்கள், ஜியாமெட்ரிக் பாக்ஸ், அட்லஸ் புத்தகம் ஆகியன வழங்கப்படுகிறது. இதுபோக குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இடைநிலைக்கல்வியில் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் 26:1 என்ற நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி, ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 19 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து அதற்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டது. ஜூலை 8ம் தேதி தொடங்கவுள்ள பொது மாறுதலுக்கான கலந்தாய்வில் உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக எடுத்து வரும் நிலையில், ஆசிரியர் எண்ணிக்கை மூலம் வரும் வருவாய், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள்ஆகியவற்றை முறைகேடாக தக்க வைக்கவும், மாணவர் எண்ணிக்கை சரிவு காரணமாக பள்ளி மூடப்படும் நிலையை தவிர்க்கவும் பல்வேறு தகிடுத்தத்தங்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் நிதியுதவி பள்ளிகள் மேற்கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, மாணவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாணவர்களின் பெயர், வயது, பெற்றோர் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், உட்பட அனைத்து விவரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் எண் (இஎம்ஐஎஸ்) ஒன்று வழங்கப்பட்டு அதன் கீழ் இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த எண்ணின் அடிப்படையிலேயே அரசின் சலுகைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த எண் மாணவர் படிக்கும் பள்ளியின் வாயிலாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தாங்கள் பெற்று வந்த நலத்திட்டங்களை போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் இழக்க தொடங்கின. இதனால், அந்த பள்ளிகளில் பணியாற்றும் அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் பள்ளி கல்வித்துறையின் அதிரடி செயல்பாட்டால் குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கேற்ப இம்மாதத்தில் இதற்கான விவரங்களை சேகரித்து அரசு நிதியுதவி பெற்று வரும் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கு குறைவாக உள்ள ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கோ அல்லது ஆசிரியர் குறைவாக உள்ள வேறு பள்ளிகளுக்கோ மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் விபரங்கள் கொண்ட இஎம்ஐஎஸ் எண் அந்த ஒன்றியங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு முறைகேடாக மாற்றப்பட்டு அந்த பள்ளிகளில் அவர்கள் படிப்பது போன்று தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தங்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை கூட்டியும், அதற்கேற்ப ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை நிலைநிறுத்தி காட்டவும், அதன் மூலம் தங்கள் பள்ளிக்கு கிடைக்கும் அரசின் நிதியாதாரங்களையும், சலுகைகளையும் தக்க வைக்கவும் குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களின் கீழ் இயங்கும் அரசு நிதியுதவி பள்ளிகள், தங்கள் பள்ளியின் அருகில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் இருந்து அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்ணை முறைகேடாக தங்கள் பள்ளியுடன் இணைத்து ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாயை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் வேலூர், மாதனூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு என பரவலாக இயங்கி வரும் குறிப்பிட்ட நிதியுதவி பள்ளிகள் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் அரசு தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே சென்று அதன் அருகில் உள்ள குறிப்பிட்ட நிதியுதவி பள்ளிகள் முழுமையான வருகை பதிவேட்டையும், இஎம்ஐஎஸ் எண் பட்டியலுடன் பெற்று வருகின்றன. தொடர்ந்து பொதுத்தேர்வு முடிந்தவுடன், ‘உங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டாம். நாங்கள் தரமான கல்வியை வழங்குகிறோம். உதவித்தொகை வழங்குகிறோம். உங்கள் பிள்ளையை எங்கள் பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்த்தால் உங்களுக்கு இவ்வளவு தருகிறோம்’ என்று கட்டாயப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்கின்றனர். குறிப்பட்ட நிதியுதவி பள்ளிகளின் இத்தகைய செயல்பாடுகளுக்கு பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகளே உடந்தையாக இருக்கின்றனர். ஆம்பூரில் அரசுபள்ளியை சேர்ந்த மாணவி ஒருவரின் முழுமையான விவரம் அங்குள்ள குறிப்பிட்ட நிதியுதவி பள்ளிக்கு மாற்றப்பட்டு அந்த பள்ளியின் வருகை பதிவேட்டிலும், சேர்க்கை பதிவேட்டிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி தொடர்ந்து அரசுப்பள்ளிக்கு சென்று வருகிறார்.ஆனால் அந்த மாணவியின் அனைத்து விவரங்களும் குறிப்பிட்ட நிதியுதவி பள்ளியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தடுக்க. நிதியுதவி பள்ளிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதகமாக்கி கொள்ளும் கல்வி அதிகாரிகள் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இஎம்ஐஎஸ் எண்ணானது தங்களுக்கு சாதகமான நிதியுதவி பள்ளிகளுக்கு வழங்கி ஒரு சில கல்வி அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதற்காக அந்த நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் மாதம் ஒன்றுக்கு கணிசமான தொகையை தொடக்க கல்வி அலுவலர்களில் சிலர் கறந்து விடுவதாகவும் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவரது விவரம் அவர் படிக்கும் பள்ளியில் இல்லாமல் வேறு ஒரு பள்ளியில் இருக்கும் நிலை ஏற்பட்டால் கல்வித்துறையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட வழி வகுக்கும் நிலை உருவாகியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews