பி.எட். கல்லூரிகளில் சேர விண்ணப்பம் நாளை மறுநாளுடன் முடிகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

பி.எட். கல்லூரிகளில் சேர விண்ணப்பம் நாளை மறுநாளுடன் முடிகிறது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு, அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பி.எட் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், வெலிங்டன் சிமாட்டி கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், வேலூரில் உள்ள அரசு பி.எட் கல்லூரிகள், லட்சுமி கல்வியியல் கல்லூரி - காந்திகிராமம், திண்டுக்கல், ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி- சேலம், தியாகராசர் பர்செப்டார் கல்லூரி - மதுரை, வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி - தூத்துக்குடி, செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி - பாளையங்கோட்டை, என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி - திருவட்டாறு, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி - தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஜூலை 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஞாயிற்றுகிழமை உள்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.500ஐ செலுத்தி மாணவர்கள் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல் அளித்து, ரூ.250 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை சென்னையில் பணமாக்கத்தக்க வகையில் ‘‘The Secretary, Tamilnadu B.Ed admissions, Chennai -600005’’ என்ற பெயரில் டிடியாகவும் சமர்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 29ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிகேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதுமுள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 40, பி.எட். படிப்புக்கான இடங்கள் உள்ளன. 2019 - 20ம் கல்வியாண்டில் இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்க உள்ளது.
இதற்கான கலந்தாய்வை சென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்க உள்ளது. ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு 500 ரூபாய் எனவும், பட்டியல் பிரிவினருக்கு 250 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை http://www.ladywillingdon.com/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews