அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்காததால் வெறுங்காலுடன் நடந்து செல்லும் அவலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 06, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்காததால் வெறுங்காலுடன் நடந்து செல்லும் அவலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான இலவச பொருட்களை தமிழக அரசின் கல்வித்துறை வழங்கி வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 97 தொடக்கப்பள்ளி, 30 நடுநிலைப்பள்ளி, 23 அரசு உயர்நிலைப்பள்ளி, 15 அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, 19 அரசு மேல்நிலைப்பள்ளி, 8 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 14 வகையான பல்வேறு இலவச பொருட்களை அறிவித்தார். இதில் நோட்டுக்கள், புத்தகங்கள், லேப்டாப், ஸ்கூல் பேக், சீருடை, மதிய உணவு, காலணி, பஸ்பாஸ், சைக்கிள், கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி, அட்லஸ் வரைபடம், பள்ளிசெல்லா குழந்தைகளுக்கான கல்வித்தொகை, தாய் தந்தையற்ற, வருமான இல்லாத மாணவர்களுக்கான திட்ட தொகை அடங்கும். ஆனால் இந்தாண்டு இதுவரை நோட்டுக்கள், புத்தகங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன. காலணி, கலர் பென்சில், அட்லஸ், பள்ளி உடைகள் உள்ளிட்ட பொருட்கள் இதுவரை எந்த பள்ளிகளிலும் வழங்கவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணி, அட்லஸ் மேப், உடைகள், கலர்பென்சில் உள்ளிட்ட பொருட்கள் இன்னும் வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் காலணி இல்லாமல் வெறும்காலில் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காலில் செருப்பு இல்லாமல் சாலையில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். சுவாமிமலை அரசு மேல்நிலையபள்ளியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானோர் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணி மற்றும் இலவச பொருட்களை விரைந்து வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், ஒரு சில பள்ளிகளில் லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளுக்கு மற்ற பொருட்கள் வழங்கவில்லை. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், வரும்போது வழங்குவோம் என்று கூறுகின்றனர் என்றார். இதுகுறித்து கல்வி அலுவலகத்தில் உள்ளவர்கள் கூறுகையில், இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கி வருகிறோம். மற்ற பொருட்களும் விரைவில் வழங்கப்படும். செருப்பு தரம் பரிசோதனைக்கு சென்றுள்ளதால் விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews