நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அலங்கரித்த அம்மா மின்விசிறி: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் சர்ச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அலங்கரித்த அம்மா மின்விசிறி: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் சர்ச்சை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மயிலாடுதுறை அருகே நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அம்மா இலவச மின்விசிறி அலங்கரித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல வீதியில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி உள்ளது. இது நூறாண்டுகளை கடந்த பள்ளியாகும். இப்பள்ளியில்தான் திமுக பொது செயலாளர் அன்பழகன், ‘பொன்னியின் செல்வன்’ எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, ‘உன்னால் முடியும்’ தம்பி என்று தன்னம்பிக்கை நூல் எழுதி புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் படித்துள்ளனர். காமராஜர் காலத்தில் எம்எல்ஏவாக இருந்தவரும் மணல்மேடு பஞ்சாலையை கொண்டு வந்தவருமான முன்னாள் எம்எல்ஏ தியாகி நாராயணசாமி நினைவாக இப்பள்ளிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியின் படிக்கட்டை ஏறியதும் முதலில் வரவேற்பது பள்ளியின் ஹால்தான். இந்த ஹாலில் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டம் என முக்கிய விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த அறையில் காற்றுவசதிக்காக இருபுறமும் உள்ள தூண்களில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டுள்ள 12 மின்விசிறிகள் மாட்டப்பட்டுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மின்விசிறிகளை அதிகாரிகள் பள்ளியில் மாட்டி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்த பணத்தில் வாங்காமல் இலவச மின்விசிறியை மாட்டியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews