👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளியில் ஒலி உச்சரிப்பு ஆய்வகம் அமைத்து மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது.
படங்களை பார்த்து பாடத்தை மாணவிகள் படிக்கும் இந்த காட்சி திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் ஒலி உச்சரிப்பு மூலம் மொழிகளை கற்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொனடிக்ட் முறை எனப்படும் இந்த வழியில் கல்வி கற்கும் மாணவர்கள், மொழியை சரளமாக கையாளும் வல்லமையை இளமையிலேயே பெற்று விடுவார்கள்.
இதுவரை தமிழக அரசு பள்ளிகளில் இது போன்ற கல்வி முறை இல்லாத நிலையில் இப்போது திருவண்ணாமலையில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் பொனடிக்ட் என்னும் ஒலி உச்சரிப்பு கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயகுமார் முயற்சியின் பேரில் இதற்காக டவுன்ஹால் பள்ளியில் தனி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளை 44 ஒலி வடிவங்களில் கற்பிக்கிறார்கள். இந்த 44 ஒலிகளையும் மாணவர்கள் 42 நாட்களில் கற்றுக் கொள்ள முடியும் என்றும், படங்களை பார்த்துக் கொண்டே, ஒலிகளை மனதில் பதிய வைப்பதால் அவர்களின் நினைவில் பாடம் என்றும் நிற்கும் என்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் கூட இல்லாத இந்த கற்பித்தல் முறை மாணவர்களுக்கும் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ள வழி வகை செய்துள்ளது. மேலும் பொனடிக்ட் முறையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க 3600 ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை பயிற்சியும் அளித்து உள்ளது. முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பணியால் மாணவர்கள் நுனி நாக்கு ஆங்கிலத்திற்கு எளிதாக பழகி உள்ளனர்.
பொனடிக்ட் கல்வி முறைக்காக 65,000 புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு உள்ளன. மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க அரசு எடுத்துள்ள முயற்சிக்கு திருவண்ணாமலை மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகள் என்றால் கல்வித் தரத்தில் இளைத்தவை என்ற எண்ணம் நீங்க இது போன்ற நடவடிக்கைகள் கை கொடுப்பதோடு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரமும் உயரும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U