👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாக்டர் ஆக வேண்டுமென்பது உங்கள் கனவா, அதை நாங்கள் நனவாக்குகிறோம்... ரெசிடென்சியல் வசதியுடன் சென்னையில் அமையவுள்ள நீட் பயிற்சி மையத்தில் இப்போதே இணைந்து டாக்டராகுங்கள்!' என்ற விளம்பரத்தை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. ஆக, நீட் பயிற்சி மையங்களும் கல்லூரிகள்போல ஹாஸ்டல் வசதியுடன் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இனிமேல் மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி இரவு பகலாக நீட் தேர்வுக்குப் படிக்க வேண்டும். இதுதான் நீட் பயிற்சி மையங்களின் திட்டம். இனிமேல், ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் போன்றவையும் மாணவர்கள் கட்ட வேண்டும்.
வட இந்தியாவில் நீட் பயிற்சி மையங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
நீட் தேர்வில் வட இந்தியர்கள் அதிகம் வெற்றி பெற இந்த மையங்களும் ஒரு காரணம். வட இந்தியா போலவே தமிழ்நாட்டிலும் நீட் பயிற்சி மையங்கள் புற்றீசல்போல பெருக ஆரம்பித்துவிட்டன என்பதையே அந்த விளம்பரம் உணர்த்தியது
. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா சமீபத்தில் தன் கருத்தை வெளியிட்டார். `நீட் தேர்வு வழியாக ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் பிசினஸ் நடக்கிறது' எனத் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
சூர்யாவின் கருத்து உண்மைதானா? கூர்ந்து கவனித்தால் நீட் தேர்வு என்பது மிகப் பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் அதிகளவில் உள்ளன. ராஜஸ்தானில் கோட்டா என்ற நகரில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் நீட், இன்ஜினீயரிங் எனப் பல்வேறு பிரிவைச் சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்வேறு கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்தனர். அதில், நீட் தேர்வுக்கு படித்தவர்கள் 60,000 பேர்.
வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கே மாணவர்கள் வந்து பயிற்சி எடுக்கிறார்கள். அந்தளவுக்கு கோட்டா நகரம் கோச்சிங் சென்டர்களுக்கு பிரபலம். இந்தியாவின் `கோச்சிங் கேபிட்டல் ' என்றே இந்த நகரைச் சொல்லலாம்.
அதேபோல், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் இங்கே அதிகம். IIT- JEE, AIPMT, நீட், இன்ஜினீயரிங் என பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள், எந்நேரமும் படிப்பு படிப்பு என கிடப்பதால் மன அழுத்தத்தில் சிக்கி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
கோட்டா நகர மாணவர்களின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்ப்பது அரிது என்று அங்கே சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். பள்ளியில் 30 முதல் 40 மாணவர்களுடன் சேர்ந்து படித்திருப்போம்.
கோட்டாவில் பயிற்சி மையத்தில் ஒரு வகுப்புக்கு 200 முதல் 300 மாணவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு 3 வாரத்துக்கு ஒரு முறை தேர்வு வைப்பார்கள்.
நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் உங்கள் பெற்றோருடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளப்படும்மதிப்பெண் குறைவாக எடுத்தால், பணத்தைக் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் உங்களை திட்டத் தொடங்குவார்கள்.
முதல் பிரச்னை இங்கே இருந்தே தொடங்கும். அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுடன் குழுவாக இருக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
இல்லையென்றால் குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுடன்தான் நீங்கள் பழக வேண்டும். கோச்சிங்சிலேயே வேறுபாடு காட்டுவார்கள்.
பெற்றோர் நெருக்கடி, புதிய சூழல், தோற்று விடுவோமோ என்கிற பயம் இவையெல்லாம் சேர்ந்து, மாணவர்களை தற்கொலை முடிவை எடுக்க வைத்து விடுகிறது.
கோட்டா நகரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு கோச்சிங் சென்டர்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே படிக்க வருகிறார்கள். வர்த்தகம் எவ்வளவு தெரியுமா... ஆண்டுக்கு ரூ.1,500 கோடி.
ராஜஸ்தானில் சம்பல் நதிக்கரையில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த சிறிய நகரத்திலேயே வருமானம் இவ்வளவு என்றால், இந்தியா முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றனவே...
அவற்றின் வருவாயை கணக்கிட முடியுமா? கல்வி வர்த்தகமானது போலவே நீட் தேர்வும் வருங்காலத்தில் பல ஆயிரம் கோடி புழங்கும் வர்த்தகமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோச்சிங் சென்டர்களில் கைப்பற்றப்பட்ட பணம்
அது மட்டுமல்ல, கோட்டா நகர கோச்சிங் சென்டர்கள் முறையான வரியும் கட்டுவதில்லை. 2017-ம் ஆண்டு இங்குள்ள 40-க்கும் மேற்பட்ட கோச்சிங் சென்டர்களில் வருமான வரித்துறை மிகப் பெரிய ரெய்டை நடத்தியது.
அதில், ரூ.100 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்பட்டது. வட மாநிலங்கள் போலவே, தமிழகத்திலும் நீட் தேர்வு மையங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
விளம்பரங்கள் வெளியிட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசைகளைத் தூண்டத் தொடங்கியுள்ளன என்பதுதான் சமீபத்திய அபாயம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U