கால்நடை மருத்துவம்: கலையியல் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

கால்நடை மருத்துவம்: கலையியல் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை மருத்துவப் படிப்புகளில் கலையியல் பிரிவுக்கான (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) அனைத்து இடங்களும் வெள்ளிக்கிழமை நிரம்பின. 268 மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தரவரிசையில் முதல் 15 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச்) 360 இடங்கள் உள்ளன. அவற்றில் 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 306 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளுக்கு ( பி.டெக்) 100 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல் நிறைவடைந்தது. அதில், பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக்., படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான கலந்தாய்வு சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொத்தம் 43 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், பொதுப் பிரிவில் கலையியல் படிப்புக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கலந்தாய்வுக்கு 789 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 463 பேர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 268 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சனிக்கிழமை பி.டெக்., படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதற்கும் அதுவே காரணம். கால்நடை மருத்துவம் பயின்றவர்களுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகளாவிய வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சிறப்புப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 43 பேருக்கு முதல் நாளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 360 இடங்கள் உள்ளன. அவற்றில் 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு 100 இடங்கள் உள்ளன. இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல் நிறைவடைந்தது. அதில், பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான கலந்தாய்வு சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுரியில் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. அதில், சிறப்புப் பிரிவினர் 68 பேருக்கும், தொழிற்கல்வியியல் பிரிவுக்கு 26 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 66 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். முதல் நாள் முடிவில் மொத்தம், 43 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்தனர். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews