தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 மாதங்களில் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன: டிஎன்பிஎஸ்சி அளித்த பதிலால் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 14, 2019

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 மாதங்களில் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன: டிஎன்பிஎஸ்சி அளித்த பதிலால் பரபரப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 மாதங்களில் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்று நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர் சங்கம் சார்பில் கேட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது. இதற்காக, பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடிதம் எழுதப்படுகிறது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவு சில மாதங்களில் வெளியிடப்படுகிறது. இந்தநிலையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டாலும் ஒரு சில மாதங்கள் கூட அந்த வினாத்தாளை பாதுகாப்பாக வைத்திருப்பது கிடையாது. மாறாக, தேர்வு முடிவு வெளியிட்ட சில நாட்களிலேயே தேர்வர்களின் வினாத்தாள்கள் அழிக்கப்பட்டு விடுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறையில் ேம 2018 மற்றும் டிசம்பர் 2018ல் நடந்த தேர்வு தொடர்பாக ெநடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர் சங்கம் சார்பில் பதில் அளிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்த விளக்கம் பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த விளக்கத்தில், தேர்வாணைய அலுவலக ஆணையின் படி மே 2018 துறை தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டு விட்டது. மேலும், கடந்த டிசம்பர் 2018ல் துறை தேர்வுகளின் Account Test for Highway Dept.Officers& Subortinates- முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் விடைத்தாள்களின் நகலை பெற தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ் கட்டண விதி 7 (1)ன்படி பக்கம் ஒன்றுக்கு ₹2 வீதம் 34 பக்கங்களுக்கு ₹68 செயலாளர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை-03 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையினை அளித்து மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளர்களின் நகலினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வு முடிந்த நிலையில், சில சமயங்களில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அதற்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விடும் பட்சத்தில் அது தொடர்பான முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews